மேஷம் ராசி அன்பர்களே…!
இன்று உங்களுக்கு பயண அலைச்சல்களும் அதற்கான சோர்வும் காணப்படும்.
இன்று நீங்கள் அதிக முயற்சி எடுக்க வேண்டும். நீங்கள் அதிக வேலை செய்தாலும் உங்கள் மேல் அதிகாரியிடம் இருந்து பாராட்டு கிடைக்காது. உங்கள் உணர்ச்சியை கட்டுப்படுத்த வேண்டும். உங்கள் துணையுடன் சாந்தமான அணுகுமுறை தேவை. நீங்கள் உங்கள் உணர்வுகளை பகிர்ந்து கொள்வீர்கள். இன்று உங்கள் நிதி நிலைமை சிறப்பாக இருக்காது. நீங்கள் கடனுக்கு ஏதேனும் விண்ணப்பித்தால் அது கிடைக்க வாய்ப்பு உள்ளது. இன்று உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்காது. தொண்டை சம்பந்தமான பிரச்சனைகள் வரவாய்ப்பு உள்ளது. குளிர்ந்த மற்றும் இனிப்பான உணவுகளை உண்பதை தவிர்த்தல் நல்லது. மாணவ மாணவியர்களுக்கு இருந்தாலும் முயற்சி செய்தால் வெற்றி பெறலாம். நண்பர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். இன்று நீங்கள் முருகன் வழிபாடு மேற்கொள்வது நல்ல பலனை பெற்றுக் கொடுக்கும். இன்று உங்கள் அதிர்ஷ்டமான திசை கிழக்கு. அதிர்ஷ்டமான எண் 2. அதிர்ஷ்டமான நிறம் பச்சை நிறம்.