ரிஷபம் ராசி அன்பர்களே…!
இன்று நெகிழ்வான அணுகுமுறை காரணமாக நீங்கள் சாதகமான பலனை பெறலாம்.
உங்கள் பணியில் நீங்கள் அதிகம் கவனம் செலுத்த
வேண்டும். ஏனென்றால், பணியில் தவறுகள் வர வாய்ப்பு உள்ளது. உங்கள் துணையுடன் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் எரிச்சல் மற்றும் கோபம் அடைவதே தவிர்ப்பது நல்லது.இன்று உங்கள் நிதி நிலையை பற்றி பார்க்கும் பொழுது உங்கள் அஜாக்கிரதை காரணமாக பண இழப்பு வர வாய்ப்புள்ளது. அவ்வாறு இழப்பு நேரிட்டால் அதை சமாளிப்பது கடினமாக இருக்கும். உங்கள் ஆரோக்கியத்தைப் பற்றி பார்க்கும் பொழுது இருமல் மற்றும் காய்ச்சல் வர வாய்ப்பு உள்ளது. குளிர்ச்சியான உணவுகளை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.
மாணவர்களுக்கு படிப்பில் சற்று மந்தநிலை இருந்தாலும் முயற்சி செய்தால் வெற்றி பெறலாம். இன்று நீங்கள் முருகன் வழிபாடு மேற்கொள்வது நல்ல பலனை பெற்றுக் கொடுக்கும். இன்று உங்கள் அதிர்ஷ்டமான திசை தென்கிழக்கு. அதிர்ஷ்டமான எண் 4. அதிர்ஷ்டமான நிறம் மஞ்சள் நிறம்.