கடகம் ராசி அன்பர்களே…!
இன்று உங்களுக்கு அமைதியான மற்றும் சவுகரியமாக இருக்கக்கூடிய நாளாக இருக்கும்.
உங்களுக்கு திருப்திகரமான நாளாக இருக்கும். இன்று உங்கள் பணியில் முன்னேற்றம் ஏற்படும். சக பணியாளர்களும் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். இன்று நீங்கள் பயணம் மேற்கொள்ள வாய்ப்பு உள்ளது. இன்று உங்கள் துணையுடன் அன்பு வயப்பட்ட நிலையில் மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். இன்று உங்கள் நிதி நிலையை பற்றி பார்க்கும் பொழுது பயனுள்ள சேமிப்பதற்கான நாட்டத்தை கொண்டிருப்பீர்கள். இது உங்களுக்கு திருப்தி அளிக்கும். உங்கள் ஆரோக்கியம் சிறப்பாகவே இருக்கும். மாணவ மாணவியர்களுக்கு விளையாட்டு மற்றும் கேளிக்கையில் மனம் ஈடுபட தோன்றும். கெட்ட சவகாசம் களை அறிந்து அவற்றை தவிர்த்து விடுதல் நல்லது. இன்று நீங்கள் பைரவர் வழிபாடு மேற்கொள்வது நல்ல பலனை பெற்றுக் கொடுக்கும். இன்று உங்கள் அதிர்ஷ்டமான திசையும் மேற்கு. அதிர்ஷ்டமான எண் 8. அதிர்ஷ்டமான நிறம் ஆரஞ்சு நிறம்.