கும்பம் ராசி அன்பர்களே..!
இன்று மகிழ்ச்சியை ஏற்படுத்தும் சூழ்நிலை காணப்படும். அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருக்கும்.
இன்று நீங்கள் எடுக்கும் முக்கிய முடிவுகள் பலனளிக்கும். பணியிட சூழல் உங்களுக்கு சாதகமாக இருக்கும். பணியை விரும்பி மேற்கொள்வீர்கள். இன்று உங்களின் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும். மகிழ்ச்சியாக உங்களின் பணியை மேற்கொள்வீர்கள். பணியிடத்தில் சுமூகமான நிலை காணப்படும். இன்று உங்களின் துணையிடம் அன்பான உணர்வுகளைப் பகிர்ந்துக் கொள்வீர்கள். இதனால் உங்களின் துணையுடன் நல்ல புரிந்துணர்வு காணப்படும். பணப்புழக்கம் சிறப்பாக இருக்கும். பங்கு வர்த்தகத்தில் ஈடுபடுவதன் மூலம் பணவரவு காணப்படும். சிறப்பான ஆரோக்கியம் காணப்படும். இன்று நீங்கள் திடமாகவும் ஆரோக்கியமாகவும் காணப்படுவீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் குறைந்தே காணப்படும். பெற்றோர்கள் பிள்ளைகளின் மனமறிந்து செயல்படுவது நல்லது. இன்று நீங்கள் மகாலட்சுமி வழிபாடு மேற்கொள்வது நல்லபலனைப் பெற்றுக் கொடுக்கும். அதிர்ஷ்டமான திசை: வடக்கு. அதிர்ஷ்டமான எண்: 2. அதிர்ஷ்டமான நிறம்: ஊதா நிறம்.