ரிஷபம் ராசி அன்பர்களே…!
இன்றைய நாளை உங்களுக்கு சாதகமான நாளாக மாற்றிக் கொள்ளலாம்.
உங்களின் மனநிலையின் மூலம் இது சாத்தியமாகும். உங்கள் நோக்கம் நிறைவேறும் வகையில் ஆன நல்ல முடிவுகளை நீங்கள் என்று எடுப்பீர்கள். இன்று உங்கள் உறுதி காரணமாக நீங்கள் பணியில் முன்னுரிமை பெறுவீர்கள். மேலதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். இன்று உங்கள் துணையுடன் மகிழ்ச்சியாகவும் இனிமையாகவும் கழிப்பீர்கள். இன்று உங்கள் நிதி நிலையைப் பற்றி பார்க்கும் பொழுது உங்களிடம் காணப்படும் பணம் போதுமானதாக இருக்கும். இன்று பணத்தை நீங்கள் உங்கள் சொந்த தேவைக்கு பயன்படுத்துவீர்கள் மற்றும் சேமிக்கவும் வாய்ப்பு உள்ளது.
இன்று உங்கள் ஆரோக்கியத்தைப் பற்றி பார்க்கும் பொழுது ஆரோக்கியம் சிறப்பாகவே இருக்கும்.
மாணவ மாணவியர்களுக்கு படிப்பில் சற்று மந்தநிலை இருந்தாலும் முயற்சி செய்தால் வெற்றி பெறலாம். நண்பர்களும் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள்.இன்று நீங்கள் பைரவர் வழிபாடு மேற்கொள்வது நல்ல பயனைப் பெற்றுக் கொடுக்கும். இன்று உங்கள் அதிர்ஷ்டமான திசை மேற்கு அதிர்ஷ்டமான எண் 5.அதிர்ஷ்டமான நிறம் அடர் சிகப்பு நிறம்.