கன்னி ராசி அன்பர்களே..!
இன்று உங்களின் ராசிக்கு பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருப்பதால் குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும்.
திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும். கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக அமைந்து குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் விஷயத்தில் சற்று கவனமுடனிருப்பது நல்லது. உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்துக்கொண்டால் ஓரளவு அனுகூலமான பலன்களைப் பெறமுடியும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். பணம் கொடுக்கல் வாங்கலில் சற்று சிந்தித்து செயல்பட்டால் வீண் பிரச்சினைகளை தவிர்க்க முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு.
அதிர்ஷ்டமான எண்: 4.
அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை நிறம்.