துலாம் ராசி அன்பர்களே..!
இன்று உங்களின் ராசிக்கு எடுக்கும் முயற்சிகளில் அனுகூலப்பலன் கிடைக்கும்.
மங்களகரமான சுபகாரியங்கள் கைக்கூடக்கூடிய யோகம் உண்டாகும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாவதுடன் கடன்களும் நிவர்த்தியாகும். கணவன் மனைவியிடையே சிறுசிறு வாக்குவாதங்கள் ஏற்பட்டாலும் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியினை அளிக்கும். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு தொழிலில் நல்ல முன்னேற்ற நிலை இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் நெருக்கடிகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு.
அதிர்ஷ்டமான எண்: 5.
அதிர்ஷ்டமான நிறம்: மஞ்சள் நிறம்.