இன்றைய பஞ்சாங்கம்
14-09-2020, ஆவணி 29, திங்கட்கிழமை, துவாதசி திதி பின்இரவு 01.30 வரை பின்பு தேய்பிறை திரியோதசி.
பூசம் நட்சத்திரம் பகல் 03.52 வரை பின்பு ஆயில்யம்.
நாள் முழுவதும் சித்தயோகம்.
நேத்திரம் – 0.
ஜீவன் – 1/2.
சுபமுகூர்த்த நாள்.
சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.
இராகு காலம்- காலை 07.30 -09.00,
எம கண்டம்- 10.30 – 12.00,
குளிகன்- மதியம் 01.30-03.00,
சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00, இரவு 10.00-11.00.
இன்றைய ராசிப்பலன் – 14.09.2020
மேஷம்
உங்களின் ராசிக்கு உறவினர்களால் தேவையற்ற பிரச்சினைகள் வரும். உடல்நிலையில் பாதிப்பு தோன்றி மறையும்.உத்தியோகத்தில் உடன் இருப்பவர்களால் அனுபவம் கிடைக்கும். உத்தியோகத்தில் மந்த நிலை மாறி முன்னேற்றம் ஏற்படக் கூடும். கடன் பிரச்சனை அனைத்தும் தீரும்.
ரிஷபம்
உங்களின் ராசிக்கு உறவினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி பெருகும். குழந்தைகள் மூலம் சுப செய்தி வரும். பெரியோர்களின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். கடன் பிரச்சினைகள் அனைத்தும் தீரும். சேமித்த பணம் உயரும். பெண்களுக்கு வேலை சுமை குறையும். தொழிலில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும்.
மிதுனம்
உங்களின் ராசிக்கு எந்த காரியம் செய்தாலும் தடங்கல் ஏற்படும். வீட்டில் இருப்பவர்களிடம் தேவையற்ற மன சங்கடம் ஏற்படும். உடல் நிலையில் கவனம் கொள்ளுங்கள். உத்தியோகத்தில் உடன் இருப்பவர்கள் ஆதரவாக இருப்பார். தெய்வ வழிபாடு கூடும்.
கடகம்
உங்களின் ராசிக்கு பொருளாதார நெருக்கடி குறைந்து நிம்மதி நிலவும். உறவினர்கள் மூலம் அனுகூலம் கிடைக்கும். தொழில் மேல் அதிகாரியிடம் இருந்து பாராட்டு பெறுவீர். நண்பர்கள் ஒத்துழைப்பாக இருப்பார். தொழிலில் லாபம் கிடைக்கும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும்.
சிம்மம்
உங்களின் ராசிக்கு நீ செய்த அனைத்தும் இல்லம் தேடி வரும். சிவ காரியங்களில் முன்னேற்றம் ஏற்படும். பெரியவரின் சந்திப்பு மகிழ்ச்சியைக் கொடுக்கும். வங்கிக் கடன் கிடைக்க வாய்ப்பு. தொழிலில் வேலை சுமை குறையும். புதிய பொருட்களை வாங்க ஆர்வம் காட்டுவீர்கள்.
கன்னி
உங்களின் ராசிக்கு எதிலும் மன மகிழ்ச்சி உண்டாகும். கணவன் மனைவியிடம் ஒற்றுமை கூடும். குழந்தைகள் படிப்பில் நல்ல முன்னேற்றம் காண்பீர்கள். உத்யோக ரீதியில் எதிர்பார்த்த தொகை கிடைக்கும். வெளியூர் பயணம் செல்ல நேரிடலாம். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும்.
துலாம்
உங்களின் ராசிக்கு உறவினர்கள் மூலம் அனுகூலம் உண்டாகும். குழந்தைகள் படிப்பில் ஆர்வம் கொள்வார்கள். சொத்து சம்பந்தமான வழக்கில் வெற்றி கிடைக்கும். தொழில் தேடுபவர்களுக்கு புதிய வாய்ப்பு கிடைக்கும். புதிய வாகனம் வாங்கும் ஆர்வம் உண்டாகும். சுப காரியங்கள் கை கூடும்.
விருச்சிகம்
உங்களின் ராசிக்கு எந்த செயல் செய்தாலும் தடை ஏற்படும். வீட்டில் எதிர்பாராத செலவு வரக்கூடும். உடன்பிறந்தவர்கள் உதவி கிடைக்கும்.உத்தியோகத்தில் உடன் இருப்பவர்களை அனுசரித்துச் சென்றால் அனுகூலம் கிடைக்கும். கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் கவனம் கொள்ளுங்கள் அதுவே உத்தமம்.
தனுசு
உங்களின் ராசிக்குசந்திராஷ்டமம் இருப்பதால் எந்த செயல் செய்தாலும் நிதானத்துடன் செய்ய வேண்டும். பிறரை நம்பி எந்த காரியத்திலும் இறங்கவேண்டாம். தொழிலில் மேல் அதிகாரிகளிடம் இருந்து வாக்குவாதத்தை குறைக்கவும். புதிய முயற்சிகளை தவிர்த்து விடுங்கள்.
மகரம்
உங்களின் ராசிக்கு திடீர் தனவரவு உண்டாகும் கூடும். வீட்டில் சுப செலவு ஏற்படும். ஆடம்பரப் பொருட்களை வாங்க ஆர்வம் கூடும். தொழிலில் எதிர்பார்த்த உதவி உயர்வு கிடைக்கும்.உத்தியோகத்தில் வெளியூர் பயணம் அனுகூலத்தை கொடுக்கும். சேமிப்பு உயரக்கூடும்.
கும்பம்
உங்களின் ராசிக்கு வியத்தகு செய்திகள் வந்து குவியும். சிவ செய்திகள் முடிவுக்கு வரும். உத்தியோகத்தில் நல்ல லாபம் காண்பீர்கள். நண்பர்கள் உதவி கிடைக்கும். தொழிலில் புதிய நம்பரில் நபரின் மூலம் உண்டாகும். வருமானம் பெறுவதற்கு வாய்ப்பு அமையும்.
மீனம்
உங்களின் ராசிக்கு எந்த செயல் செய்தாலும் சுறுசுறுப்பில்லாமல் செய்வீர்கள். உறவினர்களால் மகிழ்ச்சி இருந்தாலும் செலவு கூடும். எதிர்பார்த்த வங்கிக் கடன் கிடைக்கும். உத்யோகத்தில் போட்ட திட்டம் வெற்றியை கொடுக்கும்.