Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

நாளைய (15-09-2020) நாள் எப்படி இருக்கும்..? இதோ உங்கள் ராசிக்கு…!!

நாளைய  பஞ்சாங்கம்

15-09-2020, ஆவணி 30, செவ்வாய்க்கிழமை, திரியோதசி திதி இரவு 11.00 வரை பின்பு தேய்பிறை சதுர்த்தசி.

ஆயில்யம் நட்சத்திரம் பகல் 02.25 வரை பின்பு மகம்.

நாள் முழுவதும் சித்தயோகம்.

நேத்திரம் – 0.

ஜீவன் – 1/2.

மாத சிவராத்திரி.

பிரதோஷம்.

முருக- நவ கிரக வழிபாடு நல்லது.

 

இராகு காலம் மதியம் 03.00-04.30,

 எம கண்டம் காலை 09.00-10.30,

 குளிகன் மதியம் 12.00-1.30,

 சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.

 

நாளைய ராசிப்பலன் –  15.09.2020

மேஷம்

உங்களின் ராசிக்கு பொருளாதார ரீதியில் நெருக்கடி ஏற்படும். குழந்தைகளுடன் கருத்து வேறுபாடு தோன்றும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளை அனுசரித்து செல்லுங்கள். வியாபார ரீதியில் கொடுக்கல் வாங்கலில் சற்று கவனம் கொள்ளுங்கள்.

ரிஷபம்

உங்களின் ராசிக்கு பொருளாதார நிலை சீராக இருக்கும். உறவினர்கள் மூலம் சுப செலவு ஏற்படும். அரசு ரீதியில் எதிர்பார்த்த உதவி கிடைக்க வாய்ப்பு. குழந்தைகள் பொறுப்பாக இருப்பார். உத்யோகத்தில் புதிய ஒப்பந்தம் கிட்டும். வீட்டுத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். தெய்வ வழிபாடு உண்டாகும்.

மிதுனம்

உங்களின் ராசிக்கு குழந்தைகளின் உடல் நிலையில் மந்தநிலை ஏற்படும். தேவையற்ற செலவுகளால் கடன் வாங்க கூடும். சிக்கனமாக இருப்பதால் பணப்பிரச்சினை அகலும். தொழிலில் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வீட்டில் ஆதரவு கிடைக்கும்.

கடகம்

உங்களின் ராசிக்கு மனதில் புது தெம்பு உண்டாகும். நண்பர்கள் உதவியால் தொழிலில் நல்ல முன்னேற்றம் காண்பீர். உத்தியோகத்தில் உயர்வு கிடைக்கும். புதிய தொழில் விஷயங்களில் நல்ல பலன் கிடைக்கும். சுபகாரியங்கள் கைகூடும். வீட்டில் மன அமைதி உண்டாகும்.

சிம்மம்

உங்களின் ராசிக்கு எதிர்பாராத பிரச்சனையால் மன உளைச்சல் வரும். வேலையில் இருப்பவர்களுக்கு சுமை கூடும். உடனிருப்பவர்களை அனுசரித்துச் செல்லுங்கள் அதுவே உத்தமம். வெளிவட்டாரத் தொடர்பு மூலம் புது நட்பு உண்டாகும். சுபகாரிய விஷயங்களில் வெற்றி கிடைக்கும்.

கன்னி

உங்களின் ராசிக்கு நல்ல செய்திகள் வீடு தேடி வரும். பொருளாதாரம் மிக சிறப்பாக இருக்கும். உறவினர்கள் மூலமும் உதவி கிடைக்க வாய்ப்பு.புதிய தொழில் தொடங்கும் எண்ணம் வெற்றி கொடுக்கும். தொழிலில் அவர்கள் தகுதிக்கேற்ற உயர்வு உண்டாகும். வருமானம் கூடும்.

துலாம்

உங்களின் ராசிக்கு எந்த காரியத்தையும் துணிவுடன் செய்து முடிப்பீர்கள். தொழில் ரீதியான வெளியூர் பயணம் செல்ல நேரும். தொழிலில் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். கொடுத்த கடன் அனைத்தும் வசூலாகும். பெரியவர்களின் நட்பு உண்டாகும்.

விருச்சிகம்

உங்களின் ராசிக்கு தொழிலில் உடன் இருப்பவர்களால் தேவையற்ற பிரச்சனை வரும். வண்டி, வாகன செலவுகள் உண்டாகும். உற்றார் உறவினர் உதவி கிடைக்கும். தொழிலில் புதிய மாற்றங்களை காண்பீர். கடன் பிரச்சினைகள் அகலும்.

தனுசு

உங்களின் ராசிக்கு தொழிலில் தேக்க நிலையை எதிர்கொள்வீர்கள். சந்திராஷ்டமம் பகல் 2. 25 வரை உள்ளதால் பேச்சில் சற்று கவனம் தேவை.வாகனங்களில் செல்லும் போது நிதானமாக செல்லுங்கள் அதுவே நல்லது. புதிய முயற்சிகள் மதியத்திற்கு பின் வெற்றியை கொடுக்கும்.

மகரம்

உங்களின் ராசிக்கு உத்தியோக ரீதியில் அலைச்சலுக்கு பின் அனுகூலம் உண்டாகும். பெரியவர்களிடம் வீண் வாக்குவாதத்தை தவிர்த்துக் கொள்ளுங்கள்.பகல் 2. 25 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் மன உளைச்சல் ஏற்படும். பணம் விஷயங்களில் கவனம் கொள்ளுங்கள்.

கும்பம்

உங்களின் ராசிக்கு பணவரவு உண்டாகும். வீட்டில் உறவினர் வருகையால் மகிழ்ச்சி பெருகும். சுபகாரியங்களில் அனுகூல பலன் கிட்டும். வீட்டுத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். அரசு ரீதியில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.

மீனம்

உங்களின் ராசிக்கு குழந்தைகள் மூலம் சந்தோஷம் பெருகும்.  சுபகாரியங்கள் நடக்க வாய்ப்பு. உடன்பிறந்தவர்களின் உதவி கிடைக்கும். சொத்து சம்பந்தமான விஷயங்களில் தீர்வு காண்பீர். வியாபாரம் பெருகும். பொன்னும் பொருளும் சேரும்.

Categories

Tech |