துலாம் ராசி அன்பர்களே..!
இன்று கோயிலுக்கு செல்வதன்மூலம் இன்றைய நாளை சிறப்பான நாளாக ஆகலாம்.
பிராத்தனை உங்களுக்கு சிறப்பை ஏற்படுத்திக் கொடுக்கும். இன்று பணியில் காணப்படும் சுமை காரணமாக பதட்டமாக உணர்வீர்கள். பணியிடச்சூழல் சிறப்பாக இருக்காது. பணியில் தவறுகள் செய்ய நேரலாம். உணர்ச்சிகளை உங்களின் துணையிடம் வெளிப்படுத்துவீர்கள். இதனால் இருவருக்குமிடையில் மோதல்கள் ஏற்படும். சிறியளவு கடன் வாங்கி உங்களின் தேவைகளை பூர்த்திச்செய்துக் கொள்வீர்கள். பணத்தை சிறிது சேமித்துக் கொள்ள இது பயனுள்ளதாக இருக்கும். கால்வலி மற்றும் முதுகுவலி ஏற்படும். இது உங்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தும். மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். நண்பர்களிடத்தில் விழிப்புடன் இருப்பது நல்லது. இன்று நீங்கள் பைரவர் வழிபாடு மேற்கொள்வது நல்லபலனைப் பெற்றுக் கொடுக்கும். அதிர்ஷ்டமான திசை: கிழக்கு. அதிர்ஷ்டமான எண்: 8. அதிர்ஷ்டமான நிறம்: பச்சை நிறம்.