மேஷம் ராசி அன்பர்களே…!இன்று உங்களின் இராசிக்கு எதிர்பாராத வகையில் மனம் மகிழும் சம்பவங்கள் நிகழக்கூடும்.
கணவன் மனைவிக்கு இடையே சிறுசிறு சண்டை சச்சரவுகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. ஒருவரை ஒருவர் அனுசரித்து விட்டுக்கொடுத்த செல்வதன் மூலம் மன அமைதி கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் தங்களுக்கு கீழ் பணி புரிபவர்களை ஆதரிப்பதன் மூலம் முன்னேற்றம் காணலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்றவை கிடைக்கக் கூடிய வாய்ப்புகள் உண்டாகும். நீங்கள் முருகன் வழிபாடு மேற்கொண்டு வருவது நன்மையைக் கொடுக்கும்.
அதிர்ஷ்டமான தசை: கிழக்கு. அதிர்ஷ்டமான எண்: 7. அதிர்ஷ்டமான நிறம்: பச்சை நிறம்