மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று உங்களின் ராசிக்கு மனமகிழ்ச்சி கூடும் நாளாக அமைய இருக்கின்றது.
பெற்றோர்களின் அன்பும் ஆதரவும் பரிபூரணமாக உங்களுக்கு கிடைக்கப் பெறும். பொருளாதாரத்தில் ஏற்ற இறக்க நிலை இருந்தாலும் வீட்டு தேவைகளை எளிதில் பூர்த்தி செய்துவிடுவீர்கள். ஆரோக்கியத் தொல்லைகள் அதிகரிக்கக் கூடிய வாய்ப்புகள் இருப்பதால் கவனமாக இருப்பது நல்லது. தேவையற்ற வீண் வாக்குவாதங்களை தவிர்த்து உங்களின் வேலை உண்டு, நீங்கள் உண்டு என்று இருந்தால் மன அமைதி பெறலாம். சுயதொழில் புரிபவர்கள் நல்ல முன்னேற்றம் காணப்படும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு. அதிஷ்ட மான எண்: 6.
அதிர்ஷ்டமான நிறம்: சிகப்பு நிறம்.