கடகம் ராசி அன்பர்களே..! இன்று உங்களின் ராசிக்கு அனுகூலமான பலன்கள் கிடைக்க கூடிய நாளாக அமைய இருக்கின்றது.
உற்றார் உறவினர்கள் தொடர்பான பிரச்சனைகள் அனைத்தும் தீர்ப்பதற்குரிய சந்தர்ப்பங்கள் அமையும். உடன்பிறப்புகள் மூலம் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். கணவன் மனைவிக்கு இடையேயான ஒற்றுமை அதிகரிக்க கூடிய வாய்ப்புகள் அமையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் வளர்ச்சி பாதையில் இடையூறுகள் ஏற்படுவதற்குரிய சாத்தியக்கூறுகள் உண்டு. கொடுக்கல் வாங்கல் தொடர்பான விஷயங்களில் ஏமாற்றங்களை சந்திக்க நேரலாம். எனவே எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.
அதிர்ஷ்டமான திசை: கிழக்கு. அதிர்ஷ்டமான எண்:3. அதிர்ஷ்டமான நிறம்: ஊதா நிறம்.