கன்னி ராசி அன்பர்களே..!
இன்று தேவையில்லாத பிரச்சினைகளுக்கு இடங்கொடுக்க வேண்டாம்.
வாக்குவாதங்களில் ஈடுபடாமல் பொறுமையை பேணவேண்டும். மன அமைதியை பாதுகாக்க வேண்டும். பணவரவு அளவாக இருக்கும். உறவினர்களால் பணம் செலவாககூடும். தூக்கமின்மை ஏற்படும். மனதில் தேவையில்லாத கற்பனைகளை வளர்த்துக்கொள்ள வேண்டாம். வேலை பளு குறைந்து காணப்படுவீர்கள். திடீர் செலவை கட்டுப்படுத்த வேண்டும். அனைத்துக் காரியங்களும் அனுகூலமாக நடக்கும். மனக்கவலை நீங்கி நிம்மதி உண்டாகும். அலட்சியம் காட்டாமல் எதிலும் ஈடுபட்டால், இன்றைய நாள் இனிமைதரும் நாளாக இருக்கும். காதலில் உள்ளவர்களுக்கு பிரச்சினையிலிருந்து விடுபடும் நாளாக இருக்கும். மாணவர்களுக்கும் சிறப்பான முன்னேற்றங்கள் ஏற்படும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பிங்க் நிறத்தில் ஆடை அணியவேண்டும். பிங்க் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள் இன்றையநாள் சிறப்பாக இருக்கும்.
அதிர்ஷ்டமான திசை: கிழக்கு.
அதிர்ஷ்டமான எண்: 3 மற்றும் 5.
அதிர்ஷ்டமான நிறம்: நீலம் மற்றும் பிங்க் நிறம்.