Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் ராசிக்கு…! பாராட்டு கிட்டும்..! வளர்ச்சி ஏற்படும்.

விருச்சிகம் ராசி அன்பர்களே…!
இன்று உங்களுடைய நல்ல செயல்களை உங்கள் நண்பர்கள் பாராட்டுவார்கள்.

தொழில் மற்றும் வியாபாரம் செழித்து வளர நீங்கள் நல்ல மாற்றங்கள் செய்வீர்கள். இன்று உங்களுக்கு லாப விகிதம் அதிகமாக இருக்கும். இன்று நீங்கள் விரும்பிய உணவை உண்டு மகிழ்வீர்கள். அரசியல் துறையில் உள்ளவர்களுக்கு எதிர்ப்புகள் இன்று விலகி செல்லும். இன்று நீங்கள் பிள்ளைகள் மீது கவனம் செலுத்த வேண்டும். நிலுவையில் இருக்கும் வழக்குகளுக்கு கூட உங்களுக்கு சாதகமான தீர்ப்பு வரக்கூடும். வீடு மற்றும் மனை சார்ந்த முயற்சிகள் எடுக்கும் பொழுது கவனம் தேவை. பழைய வாகனத்தை விற்றுவிட்டு வேறு புதிய வாகனங்கள் வாங்குவதற்கான சிந்தனையும் உங்களுக்கு வந்து சேரும். மனதில் புதிய உறுதியும் மகிழ்ச்சியும் இன்று ஏற்படும். இன்று உங்களுக்கு முயற்சி அதிகரிக்கும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். இன்று உங்களுடைய எளிய மனதினால் நல்லவர்களின் மனதில் இடம் பிடிப்பீர்கள். இன்றைய நாள் உங்களுக்கு உன்னதமான நாளாகவே இருக்கிறது. இன்று உங்களுக்கு பிரச்சினைகள் எதுவும் இல்லாமல் சுமுகமாக நாளாகவே முடியும். கணவன் மற்றும் மனைவிக்கிடையே அன்பு கூடும். நெருக்கம் அதிகரிக்கும். தம்பதிகளுக்கும் குழந்தை வரம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. மாணவ மாணவியர்களுக்கு இன்று கல்வியில் ஆர்வம் அதிகரித்து காணப்படும். நண்பர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். முக்கியமான செயல்கள் செய்யும் பொழுது நீங்கள் பிங்க் நிறத்தில் ஆடைகள் அணிவது சிறந்தது. நீங்கள் சிவபெருமான் வழிபாடு மேற்கொள்வது உங்களுக்கு நல்ல பயனை பெற்றுக் கொடுக்கும்.
அதிர்ஷ்டமான திசை வடக்கு. அதிர்ஷ்டமான எண் 7 மற்றும் 9.
அதிர்ஷ்டமான நிறம் பிங்க் மற்றும் ஆரஞ்சு நிறம்.

Categories

Tech |