கடகம் ராசி அன்பர்களே…! இன்று உங்களின் ராசிக்கு எதையும் துணிச்சலாக எதிர்கொள்வீர்கள். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் விஷயத்தில் வீண் விரையங்கள் ஏற்படும் என்பதால் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. உற்றார் உறவினர்கள் சற்றே சாதகமாக இருப்பார்கள். கொடுக்கல் வாங்கல் சரளமாக நடைபெறுவதால் பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்த முடியும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்து வந்த மறைமுக எதிர்ப்புகள் யாவும் விலகி, லாபம் ஏற்படும்.
புதிய வாய்ப்புகளும் உங்களைத் தேடி வரும். உத்தியோகஸ்தர்கள் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். எதிர்பார்க்கும் பதவி உயர்வுகள் கிடைப்பதில் தடை மற்றும் தாமதங்கள் உண்டாகும். நீங்கள் முருகன் வழிபாடு மேற்கொள்வது மிகவும் நல்லது.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை: மேற்கு
அதிஷ்டமான எண்: 5
அதிஷ்டமான நிறம்: பச்சை நிறம்