Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மிதுனம் ராசிக்கு…! வாய்ப்புகள் அதிகரிக்கும்..! பெருமை உண்டாகும்..!!

மிதுனம் ராசி அன்பர்களே…!
இன்று உங்கள் மனதில் புதிய நம்பிக்கையை உண்டாகும்.

எதையும் எப்படியும் செய்துவிடலாம் என்ற துணிச்சலும் உங்களுக்கு இருக்கும். இன்று உங்களுக்கு பழைய பிரச்சனைகளில் இருந்து தீர்வு கிடைக்கும் நாளாகவே இன்று இருக்கிறது. செயல்களில் நேர்த்தியும் வசீகரமும் கலந்தே காணப்படும். இன்று உங்களுக்கு முக கவர்ச்சி அதிகரிக்கும். இன்று நீங்கள் ஆலயம் சென்று வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது. இன்று நீங்கள் புண்ணிய தலங்களுக்கு சென்று மனதை உற்சாகமாக வைத்துக் கொள்வீர்கள். இன்று உங்களுக்கு தொழில் மற்றும் வியாபாரம் செழிக்க அனுகூலமான சூழ்நிலை உண்டாகும். இன்று உங்களுக்கு பண பரிவர்த்தனை திருப்திகரமாக இருக்கும். அரசியல்வாதிகளுக்கு பொறுப்பான பதவி கிடைக்க நல்ல யோகங்களும் உண்டாகும் நாளாக இருக்கிறது . கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு சின்னதாக ஏற்பட வாய்ப்பு உள்ளது. தயவு செய்து இதனை ஊதிப் பெரிதாக்க வேண்டாம். ஒருவர் புரிந்து கொண்டு நடப்பது சிறந்தது. பிள்ளைகள் உங்களின் பேச்சைக் கேட்காமல் தன்னிச்சையாக முடிவுகளை எடுப்பார்கள் இந்த விஷயத்தில் உங்களுக்கு கோபம் அதிகரிக்கும். இன்று நீங்கள் உங்கள் பிள்ளைகள் எவ்வாறு படிக்கிறார்கள் என்று கண்காணித்துக் கொள்வது மிகவும் நல்லது. உறவினர் மற்றும் நண்பர்களிடம் கவனமாக பழகுவது சிறந்தது. சில நபர்கள் உங்களிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்யக் கூடும். அறிவைக் கொண்டு தான் எதையும் சாதிப்பீர்கள். இன்று நீங்கள் அவசரம் காட்டாதீர்கள் மற்றும் அலட்சியம் காட்டாதீர்கள். இன்று உங்களுக்கு எதிரிகளின் தொல்லை இருந்தாலும் முயற்சி செய்தால் வெற்றி பெறலாம். இன்று கல்வியில் ஆர்வம் அதிகரித்து காணப்படும். மாணவர்களுக்கு இன்று நல்ல முன்னேற்றம் காணப்படுகிறது. இன்று நீங்கள் முக்கியமான பணிகளை மேற்கொள்ளும் பொழுது பிரவுன் நிறத்தில் ஆடைகள் அணிவது சிறந்தது. இன்று நீங்கள் விஷ்ணு பகவான் வழிபாடு மேற்கொள்வது உங்களுக்கு நல்ல பலனை பெற்றுக் கொடுக்கும்.  அதிர்ஷ்டமான திசை கிழக்கு. அதிர்ஷ்டமான எண் 1 மற்றும் 6. அதிர்ஷ்டமான நிறம் நீலம் மற்றும் பிரவுன் நிறம்.

Categories

Tech |