ரிஷபம் ராசி அன்பர்களே…!
இன்று உங்களின் பொறுமை சோதனைக்கு உண்டாகும் நாளாக இருக்கும்.
முறையான தகவல் பரிமாற்றம் இல்லாத காரணத்தினால் உங்களின் நெருக்கமானவர்களிடம் சண்டை ஏற்பட வாய்ப்பு உண்டு. இன்று உங்களின் கடின உழைப்பின் மூலம் வெற்றி பெறுவீர்கள். உங்களின் மன குழப்பத்தை உங்களின் துணையிடம் வெளிப்படுத்தாதீர்கள். அமைதியாக இருப்பது நல்ல பலனை தரும். உங்களின் நிதி நிலைமை சமமாக இருக்கும். உங்களின் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியாது. அதற்கு நீங்கள் சிறிய அளவு கடன் வாங்குவீர்கள்.இன்று உங்களின் ஆரோக்கியத்தை பற்றி பார்க்கும் பொழுது சூடு சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. இன்று நீங்கள் தண்ணீர் அதிகமாகப் பருகுவது உடலுக்கு நல்லது.மாணவ மாணவியர்களுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரித்து காணப்படும். நண்பர்களும் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். இன்று நீங்கள் பிரத்தியங்கிரா வழிபாடு மேற்கொள்வது நல்ல பலனை பெற்றுக் கொடுக்கும். உங்களின் அதிர்ஷ்டமான திசை கிழக்கு. அதிர்ஷ்டமான எண்-1. அதிர்ஷ்டமான நிறம் ஊதா நிறம்.