இன்றைய பஞ்சாங்கம்
16-09-2020, ஆவணி 31, புதன்கிழமை, தேய்பிறை சதுர்த்தசி திதி இரவு 07.57 வரை பின்பு அமாவாசை.
மகம் நட்சத்திரம் பகல் 12.20 வரை பின்பு பூரம்.
சித்தயோகம் பகல் 12.20 வரை பின்பு அமிர்தயோகம்.
நேத்திரம் – 0.
ஜீவன் – 1/2.
போதாயன அமாவாசை.
இராகு காலம் மதியம் 12.00-1.30,
எம கண்டம் காலை 07.30-09.00,
குளிகன் பகல் 10.30 – 12.00,
சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00, மதியம் 1.30-2.00, மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00, 11.00-12.00
இன்றைய ராசிப்பலன் – 16.09.2020
மேஷம்
உங்களின் ராசிக்கு வீட்டில் வரவுக்கு ஏற்ற செலவு இருக்கும். உடல்நிலையில் பாதிப்பு ஏற்படும். பூர்வீக சொத்துகளால் அலைச்சல் இருக்கும் அதேசமயம் அனுகூலமும் கிட்டும். தொழிலில் உடன் இருப்பவர்களால் உதவி கிட்டும். வியாபாரத்தில் முன்னேற்றம் காண்பீர்.
ரிஷபம்
உங்களின் ராசிக்கு குழந்தைகளால் மன அமைதி குறையும். வெளியூர் செல்வதால் வீண் அலைச்சல் ஏற்படும். வீண் செலவுகளால் சேமிப்புகள் குறையும்.உடனிருப்பவர்களை அனுசரித்துச் செல்லுங்கள் அதுவே உத்தமம். சுபகாரியம் உண்டாகும்.
மிதுனம்
உங்களின் ராசிக்கு சுபகாரிய நிகழ்ச்சியில் அனுகூல பலன் உண்டாகும். உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். தொழில் செய்பவர்களுக்கு தொழிலில் உயரம் காண்பீர். உத்தியோக ரீதியான வெளிமாநில தொடர்பு உண்டாகும்.
கடகம்
உங்களின் ராசிக்கு வீட்டில் அசையா சொத்து வழிகளில் செலவுகள் உண்டாகும். உடன் பிறந்தவர்களிடம் அனுசரித்து சென்றால் வீன் பிரச்சனையை தவிர்க்க முடியும். கடன் பிரச்சினை அகலும். நண்பர்கள் மூலம் உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருந்த தடைகள் விலகும் நல்ல வாய்ப்பு கிடைக்கும்.
சிம்மம்
உங்களின் ராசிக்கு தொழில் சிறப்பாக இருக்கும். புதிய கருவிகளை வாங்குவீர்கள். தொழில் ரீதியில் வெளியூர் பயணம் செல்வீர்கள். உடல்நலம் சீராக இருக்கும். சுறுசுறுப்பாக இருப்பீர்கள். சுபகாரியங்களில் நல்லபலன் உண்டாகும். மனமகிழ்ச்சி கூடும்.
கன்னி
உங்களின் ராசிக்கு வீட்டில் சுப செலவு வரும். உடல் ஆரோக்கியத்தில் மந்தம் காண்பீர். எளிதில் முடியக்கூடிய வேலைகள் அனைத்தும் சற்று தாமதமடையும். உடன் பிறந்தவர்களை அனுசரித்து செல்லுங்கள் அதுவே உத்தமம். உத்தியோகத்தில் உடன் இருப்பவர்களால் லாபம் உண்டாகும்.
துலாம்
உங்களின் ராசிக்கு நல்ல செய்தி வந்து வீட்டில் மகிழ்விக்கும். புதிய சொத்துக்களை வாங்கும் முயற்சி உண்டாகும். தொழிலில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். தொழிலில் எதிர்பாராத லாபம் கிட்டும். உடல்நலம் சீராக இருக்கும். சுப காரியங்கள் அனைத்தும் கைகூடும்.
விருச்சிகம்
உங்களின் ராசிக்கு நண்பர்கள் மூலம் நல்ல செய்தி கிடைக்கும். உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் உடன் இருப்பவர்கள் சாதகமாக இருப்பார். தொழிலில் இருந்த எதிரிகள் குறையும். நவீன பொருட்களை வாங்க ஆர்வம் கொள்வீர்.
தனுசு
உங்களின் ராசிக்கு எந்த செயல் செய்தாலும் தடை ஏற்படும். வீட்டில் நிம்மதி இருக்க உற்றார் உறவினரிடம் அனுசரித்து செல்லுங்கள்.நண்பர்களின் உதவியால் பொருளாதாரப் பிரச்சனை விலகும். தொழிலில் போட்ட திட்டங்கள் அனைத்தும் வெற்றியை கொடுக்கும்.
மகரம்
உங்களின் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் தேவையில்லாத மனக் குழப்பங்கள் ஏற்படும். எந்த செயல் செய்தாலும் தாமதம் ஏற்படும்.உற்றார் உறவினரிடம் பேசும்போது நிதானமாக இருங்கள். வாகனங்களில் செல்லும்போது கவனம் கொள்ளுங்கள்.
கும்பம்
உங்களின் ராசிக்கு எந்த காரியம் செய்தாலும் வெற்றிகரமாக செய்வீர்கள். தொழிலில் கொடுக்கல் வாங்கல் திருப்தி கொடுக்கும். சுபநிகழ்ச்சிகள் நடைபெறும். வீட்டில் இருந்த பிரச்சனை அனைத்தும் தீரும். பெரியவர்களின் நட்பு உண்டாகும். தேவைகள் அனைத்தும் நிறைவேறும்.
மீனம்
உங்களின் ராசிக்கு பணவரவு இருக்கும். குழந்தைகளால் பெருமை உண்டாகும். உத்யோகத்தில் இனிய நிகழ்ச்சி நடைபெறும். உற்றார் உறவினர்களால் அனுகூலம் கிட்டும். தொழிலில் நண்பர்களின் ஒத்துழைப்பு உண்டாகும். கடன் பிரச்சினைகள் அனைத்தும் நீங்கும்.