மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று உங்களின் ராசிக்கு பணவரவுகள் திருப்திகரமாக இருக்கும்.
வீட்டுத் தேவைகள் பூர்த்தியாகும். கணவன் மனைவிக்கு இடையே தேவையற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம் என்பதால் விட்டுக் கொடுத்து நடந்து கொண்டால் குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும். எந்த ஒரு விஷயத்திலும் நிதானமாக செயல்படுவது நல்லது. உடன்பிறந்தவர்கள் ஓரளவிற்கு அனுகூலமாக செயல்படுவார்கள். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக் கொண்டால் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தாமதமான பலன் உண்டாகும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்லவேண்டியிருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் திறமைக்கேற்ற பாராட்டுதல்களும் கிடைக்கப் பெறுவதால் மன மகிழ்ச்சி உண்டாகும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு. அதிர்ஷ்டமான எண்: 1 அதிர்ஷ்டமான நிறம்: ரோஸ் நிறம்.