கடகம் ராசி அன்பர்களே..! இன்று உங்களின் ராசிக்கு எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றிமறையும் என்பதால் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வது, உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருப்பது நல்லது. பணவரவுகள் தேவைக்கேற்றபடி அமைந்து உங்களின் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும் என்றாலும் எதிலும் சற்று சிக்கனமாக இருப்பது நல்லது. கணவன் மனைவி விட்டுக் கொடுத்து நடந்து கொள்வதால் ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். உற்றார் உறவினர்கள் ஓரளவு அனுகூலமாக செயல்படுவார்கள். சுபகாரிய முயற்சிகளில் சற்று தள்ளிவைப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடிவரும். வியாபாரம் செய்பவர்களுக்கு பயணங்களால் இன்று அனுகூலம் உண்டாகும்.
அதிர்ஷ்டமான திசை: கிழக்கு. அதிர்ஷ்டமான எண்: 4. அதிர்ஷ்டமான நிறம்: மஞ்சள் நிறம்.