சிம்மம் ராசி அன்பர்களே..! இன்று உங்களின் ராசிக்கு நீங்கள் எதிலும் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய நாள் ஆகும்.
தேவையற்ற அலைச்சல்கள் உண்டாகும். உடல் ஆரோக்கிய ரீதியாக உஷ்ணம் சம்பந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. பணவரவுகள் சுமாராக இருந்தாலும் தேவைகள் பூர்த்தியாகும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. எதிர்பாராமல் கிடைக்கும் உதவியால் கடன்கள் ஓரளவு குறையும். பூர்வீக சொத்துக்களால் வீண் செலவுகள் உண்டாகக்கூடும். செய்யும் காரியங்களில் தடை மற்றும் தாமதங்கள் ஏற்படக்கூடும். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொள்வதன் மூலம் முன்னேற்றம் உண்டாகும்.
அதிர்ஷ்டமான திசை: கிழக்கு. அதிர்ஷ்டமான எண்: 8. அதிர்ஷ்டமான நிறம்: காவி நிறம்.