கன்னி ராசி அன்பர்களே..! இன்று உங்களின் ராசிக்கு எடுக்கும் முயற்சியில் சாதகமான பலன்களை அடைவீர்கள்.
உங்களின் பலமும் வலிமையும் அதிகரிக்கக்கூடும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் மருத்துவ செலவுகள் எதுவும் ஏற்படாது. குடும்பத்தில் நிம்மதியும் மகிழ்ச்சியும் நிலவும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். புத்திர வழியில் சுபசெய்திகள் வந்து சேரும். உற்றார் உறவினர்கள்அனுகூலமாக இருப்பார்கள். பணம் பல வழிகளில் தேடி வந்து பாக்கெட்டை நிரப்பும். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் குறைந்து புதிய வாய்ப்புகள் கிடைக்கப்பெறும். எந்த வித பிரச்சனைகளையும் சமாளிக்கக்கூடிய ஆற்றலைப் பெறுவீர்கள்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு. அதிர்ஷ்டமான எண்: 1. அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை நிறம்.