விருச்சிகம் ராசி அன்பர்களே…!
இன்று உங்களுக்கு உடல் சோர்வு ஏற்பட்டு நீங்கும்.
சில பிரச்சினைகளை சமாளிக்க வேண்டியிருக்கும். பணமிருந்தும் உங்களுக்கு உரிய நேரத்தில் கைக்கு கிடைக்காமல் தாமதம் ஆகும். இன்று உங்களுக்கு கால தாமதத்துடன் தான் எந்த காரியமும் நடக்கும். இன்று நீங்கள் உங்கள் நண்பர்களை அனுசரித்து செல்ல பாருங்கள். அவர்களிடம் நீங்கள் முற்றிலும் கேலி கிண்டல் பேச்சை தவிர்க்கப் பாருங்கள். இன்று கணவன் மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு வந்து பின்னர் சரியாகிவிடும்.
ஒருவரை ஒருவர் சரியான முறையில் புரிந்து கொண்டு நடந்து கொள்ள வேண்டும். தயவு செய்து நீங்கள் எடுக்கும் முடிவுகளில் தெளிவாக இருக்க வேண்டும். உங்கள் பிள்ளைகளிடம் அன்பாகப் பேசிப் பழகுவது நல்லது.கண்காணிப்பது சிறந்தது எவ்வாறு படிக்கிறார்கள் என்ன
செய்கிறார்கள் என்று கண்காணிப்பது சிறந்தது. ஆனால் சந்தேக நோக்கில் மட்டும் பார்க்கக்கூடாது. இன்று நீங்கள் திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் உங்களுக்கு வெற்றி நிச்சயம். இன்று நீங்கள் உங்கள் முன்கோபத்தை தவிர்ப்பது சிறந்தது. இன்று உங்களுக்கு வசீகரமான தோற்றம் உள்ளது. இன்று உங்களுக்கு முக கவர்ச்சியும் கூடும்.
புதியதாக நீங்கள் காதலில் வயப்பட கூடு வீர்கள். பிரச்சினைகள் ஓரளவு இருக்கத்தான் செய்யும் அது இல்லாமல் மாற்றுவது உங்கள் கையில்தான் உள்ளது. மனதை நீங்கள் அமைதியாக வைத்துக் கொள்ளுங்கள். யோகா மற்றும் தியானப் பயிற்சி மேற்கொள்வதன் மூலம் மனம் தெளிவுபெறும் மற்றும் அறிவாற்றல் அதிகரிக்கும். புதிய முயற்சிகளை இப்போதைக்கு தள்ளி வைப்பது சிறந்தது. காதலில் உள்ளவர்களுக்கு காதல் கைகூடும்.
மாணவ மாணவியர்களுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரித்து காணப்படும். நண்பர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். இன்று நீங்கள்முக்கியமான பணிகளை மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடைகள் அணிவது சிறந்தது. இன்று நீங்கள் சித்தர் மற்றும் குரு பகவான் வழிபாடு மேற்கொள்வது உங்களுக்கு நல்ல பலனை பெற்றுக் கொடுக்கும்.
அதிர்ஷ்டமான திசை தெற்கு. அதிர்ஷ்டமான எண் 3 மற்றும் 7.
அதிர்ஷ்டமான நிறம் வெள்ளை மற்றும் நீலம் நிறம்.