விருச்சிகம் ராசி அன்பர்களே..! இன்று உங்களின் ராசிக்கு முன் கோபத்தைக் குறைத்துக் கொண்டு சமயத்திற்கு ஏற்ற வாறு நடந்து கொள்வது நல்லது.
மற்றவர்களிடம் நிதானமாக செயல்படுவதன் மூலம் எதையும் எதிர் கொள்ளும் பலம் பெறுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தினால் மருத்துவ செலவுகளை தவிர்க்கலாம். எந்த ஒரு காரியத்திலும் ஒரு முறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்ல பலனைக் கொடுக்கும். உற்றார் உறவினர்களிடையே சிறுசிறு வாக்குவாதங்கள் உண்டாகும். பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது மிகவும் நல்லது. பணவரவு சுமாராக இருந்து தேவைகள் யாவும் பூர்த்தியாகும் என்றாலும் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. தொழில் மற்றும் வியாபாரம் போன்றவற்றில் லாபத்தை அடைய சிறிது கஷ்டப்பட வேண்டியிருக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு அதிர்ஷ்டமான எண்: 3 அதிர்ஷ்டமான நிறம்: நீல நிறம்.