கும்பம் ராசி அன்பர்களே…!
இன்று குடும்பத்தில் உங்களின் பேச்சுக்கு கண்டிப்பாக மதிப்பு மரியாதை இருக்கும்.
இன்று உங்கள் செயல்களில் கூட அதிக வேகம் இருக்கும். கணவன் மனைவி இருவருக்கும் இடையே சகஜமான சூழ்நிலை காணப்படும். பிள்ளைகள் உங்களை மதித்து நடப்பது உங்கள் மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கும். உங்கள் பிள்ளைகள் உங்களுக்கு கண்டிப்பாக பெருமை சேர்த்துக் கொடுப்பார்கள்.
அடுத்தவரை பொறுப்புக்களை ஒப்படைக்கும் போது கவனம் தேவை.
மிகப் பெரிய வேலைகளை நீங்களே செய்து கொள்வது மிகவும் சிறந்தது. பயணத்தின் பொழுது நீங்கள் பெரிய தொகையை எடுத்து செல்ல வேண்டாம்.
இன்று நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் உங்களுக்கு கண்டிப்பாக கிடைக்கும். விழிப்புடன் செயல்பட்டு எதையும் செய்வீர்கள். இன்று உங்கள் முயற்சிகள் வெற்றி அளிக்கும். உங்கள் உடல் ஆரோக்கியம் சிறப்பாகவே இருக்கும்.
சுறுசுறுப்பாக இருப்பீர்கள். இன்று உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சியும் கலகலப்பும் குறைவே இல்லை.
இன்று நீங்கள் மாலை நேரத்தில் உங்கள் குடும்பத்தாருடன் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள்.
இன்று உங்கள் வாழ்க்கையில் நல்ல திருப்பங்களும் முன்னேற்றங்களும் ஏற்படும். என்ன தொழில் புதிதாக செய்யலாம் என்று சிந்தனைகளும் வர வாய்ப்பு உள்ளது. சில முயற்சிகளுக்குப் பின் நல்ல வெற்றி வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகத்தில் சக பணியாளர்கள் உங்களை மதித்து நடப்பார்கள். உத்தியோகத்தில் உங்களுக்கு பதவி உயர்வு சம்பள உயர்வு வர வாய்ப்பு உள்ளது. பெண்களுக்கும் இன்று முன்னேற்றகரமான நாளாக இருக்கிறது. இன்று உங்கள் வீட்டிற்கு உறவினர்களின் வருகை இருக்கக்கூடும்.
அதனால் செலவு அதிகரிக்கும். ஆடம்பர பொருள் மீது ஆசைப் படாமல் அளவை கட்டுக்குள் வைப்பது சிறந்தது. மாணவ மாணவிகளுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரித்து காணப்படும். நண்பர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். இன்று நீங்கள் சித்தர் மற்றும் குரு பகவான் வழிபாடு மேற்கொள்வது உங்களுக்கு நல்ல பலனை பெற்றுக் கொடுக்கும். இன்று காதலில் உள்ளவர்களுக்கு சில பல பிரச்சனைகள் வந்த பின்னரே காதல் கைகூடும்.
இன்று நீங்கள் முக்கியமான பணிகளை மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடைகள் அணிவது சிறந்தது.
அதிர்ஷ்டமான திசை வடகிழக்கு. அதிர்ஷ்டமான எண் 7 மற்றும் 9. அதிர்ஷ்டமான நிறம் பச்சை மற்றும் நீலம் நிறம்.