மீனம் ராசி அன்பர்களே…!
இன்று உங்களுக்கு தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ள சிரமங்கள், சிக்கல்கள் அனைத்தும் நீங்கிவிடும்.
இன்றைய நாள் உங்களுக்கு முன்னேற்றகரமான நாளாக இருக்கும்.
எதையும் பற்றிக் கவலைப் படுபவர்களுக்கு கூட இன்று ஏதோ ஒரு விஷயத்தில் நல்லது காத்திருக்கிறது.
இன்று உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பணிச்சுமை குறைய வாய்ப்பு உள்ளது. இன்று உங்களுக்கு உடல் சோர்வும் குறையும். இன்று நீங்கள் எதிலும் உற்சாகமாக ஈடுபடுவீர்கள். கணவன் மனைவிக்கு இடையே ஏதோ ஒரு மனக்கசப்பு இருந்தாலும் பின்னர் அது சரியாகிவிடும். இன்று பயணம் மேற்கொள்ள வாய்ப்பு உள்ளது. பயணத்தின் பொழுது பெரிய தொகையை எடுத்துச் செல்லாமல் இருப்பதே சிறந்தது. உங்களுக்கு சுய கௌரவம் உயரும் நாளாக இருக்கிறது.
அனைத்துச் சிக்கல்களும் தீர்ந்து இனிமை காணும் நாளாகத் தான் இன்றைய நாள் உங்களுக்கு அமையும்.
தேவையில்லாத மனக் குழப்பங்களை தவிர்ப்பது சிறந்தது. இன்று நீங்கள் உங்கள் முன்கோபத்தை தவிர்ப்பது மிகவும் சிறந்தது. இன்றைய நாளின் புழல் திட்டமிட்டு செயல்பட்டால் வெற்றி நிச்சயம். கணவன் மனைவிக்கு இடையே சிறுசிறு பிரச்சினைகள் வரக்கூடும் ஆனால் அது பின்னர் சரியாகிவிடும்.
பிரச்சினைகள் வந்து சேரும் பின்னர் காதல் கைகூடும். திருமணம் ஆகாதவர்களுக்கு வரன் தேடினால் சுப செய்தி வர வாய்ப்பு உள்ளது. மாணவ மாணவியர்களுக்கு இன்று கல்வியில் ஆர்வம் அதிகரித்து காணப்படும்.
நண்பர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். நீங்கள் முக்கியமான பணிகளை மேற்கொள்ளும்போது மஞ்சள் நிறத்தில் ஆடைகள் அணிவது சிறந்தது.இன்று நீங்கள் சித்தர் மற்றும் குரு பகவான் வழிபாடு மேற்கொள்வது உங்களுக்கு நல்ல பலனை பெற்றுக் கொடுக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு. அதிர்ஷ்டமான எண் 1 மற்றும் 6. அதிர்ஷ்டமான நிறம் மஞ்சள் மற்றும் நீலம் நிறம்.