Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு…! கவனம் தேவை..! வாக்குவாதங்கள் ஏற்படும்..!!

துலாம் ராசி அன்பர்களே…!
இன்று உங்கள் மனதில் வருத்தம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

நண்பரின் ஆலோசனை உங்களுக்கு ஓரளவு நல்வழி காட்டும். இன்று உங்களுக்கு உண்மையான சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் எச்சரிக்கையாக இருங்கள். இன்று உங்கள் வியாபாரத்தில் அதிகப்படியான முதலீடு எதுவும் செய்ய வேண்டாம். எந்த ஒரு பணியையும் திட்டமிட்டு செயல்படுவது சிறந்தது. அவசரம் எதிலும் காட்ட வேண்டாம். எதிலும் ஆர்வமுடன் இருப்பது சிறந்தது. இன்று நீங்கள் எதிர்பார்த்த பணவரவு கிடைப்பதில் தாமதம் ஏற்படும். இன்று நீங்கள் உங்கள் மனதை தைரியமாக வைத்துக் கொள்வது சிறந்தது. யாருக்கும் எந்தவிதமான வாக்குறுதிகளும் கொடுக்க வேண்டாம்.
ஜாமீன் கையெழுத்து எதுவும் போட வேண்டாம். இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் திடீர் பயணம் மேற்கொள்ள வாய்ப்பு உள்ளது.
மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து செல்வது மிகவும் சிறந்தது. இன்று நீங்கள் உங்கள் முன்கோபத்தை தவிர்ப்பது சிறந்தது. இன்று நீங்கள் வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. ஆவணங்களையும் சரிபார்த்து கொண்டு செல்ல வேண்டும்.கணவன் மனைவி இருவருக்கும் இடையே சின்ன சின்ன வாக்குவாதங்கள் பிரச்சனைகள் வரவாய்ப்பு உள்ளது. காதலில் உள்ளவர்களுக்கு காதல் கைகூடும்.
மாணவ மாணவியர்களுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரித்து காணப்படும். நண்பர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். இன்று நீங்கள் கடின உழைப்பு செய்து வெற்றி பெறுவீர்கள்.
இன்று நீங்கள் பெரியோர்களை மதித்து நடப்பது சிறந்தது. இன்று நீங்கள் முக்கியமான பணிகளை மேற்கொள்ளும் பொழுது பிங்க் நிறத்தில் ஆடைகள் அணிவது சிறந்தது. இன்று நீங்கள் அம்மன் வழிபாடு மேற்கொள்வது உங்களுக்கு நல்ல பலனை பெற்றுக் கொடுக்கும்.

அதிர்ஷ்டமான திசை தெற்கு. அதிர்ஷ்டமான எண் 5 மற்றும் 7.
அதிர்ஷ்டமான நிறம் பிங்க் மற்றும் நீல நிறம்.

Categories

Tech |