மீனம் ராசி அன்பர்களே..! இன்று உங்களின் ராசிக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும்.
தேவையற்ற அலைச்சல் மற்றும் டென்ஷன் உண்டாகும். குடும்பத்தில் கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை நிலவும். உறவினர்களுடன் கருத்துவேறுபாடு ஏற்பட்டாலும் விட்டுக்கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சனையை தவிர்க்கலாம்.பொருளாதார நெருக்கடியால் வெளியில் கடன் வாங்கும் சூழ்நிலை உருவாகும். பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெற்று மகிழ்ச்சி உண்டாகும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளையும், தொழிலாளியும் அனுசரித்து சென்றால் நல்ல பலனை பெற முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு. அதிர்ஷ்டமான எண்:2. அதிர்ஷ்டமான நிறம்: ரோஸ் நிறம்.