மேஷம் ராசி அன்பர்களே..! இன்று நீங்கள் நினைப்பது சரியே என வாதிடும் குணம் கொண்ட உங்களின் ராசிக்கு நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கக்கூடிய இனிய நாளாக இருக்கும்.
குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் நிறைந்திருக்கும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். தடைப்பட்ட திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளை தற்போது மேற்கொண்டால் அனுகூலமான பலனும் உண்டாகும். புதிய பொருள் போன்றவற்றை வாங்கும் வாய்ப்புகள் அமையும். அசையும், அசையா சொத்துக்கள் வாங்கும் முயற்சிகளில் சிலருக்கு சாதகப்பலன் உண்டாகும். குடும்பத்தில் கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும்.
அதிர்ஷ்டமான தசை: கிழக்கு. அதிர்ஷ்டமான எண்: 1 அதிர்ஷ்டமான நிறம்: கருநீலம்.