விருச்சிகம் ராசி அன்பர்களே…!
இன்று உங்களுக்கு வெளி வட்டாரங்களில் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும்.
இன்று தாய்வழி தனலாபம் உங்களுக்கு கண்டிப்பாக கிடைக்கும். சகோதர சகோதரிகளும் உங்களுக்கு ஒத்துழைப்பு கொடுப்பார்கள். புது வாழ்க்கையில் மதிப்பும் மரியாதையும் கண்டிப்பாக உயரும். சமூக அக்கறையுடன் தான் நீங்கள் எதையும் செய்வீர்கள். இன்று உங்களுக்கு தேவையில்லாத செலவுகள் கொஞ்சம் இருக்கும் பார்த்துக் கொள்ளுங்கள்.
நண்பர்களிடம் நீங்கள் வெளியிடங்களில் பொழுதைக் கழிப்பீர்கள். உங்களுக்கு சுபவிரயச் செலவுகள் அதிகரிக்கும். இன்று நீங்கள் எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் சிறிது தாமதம் ஏற்படும். இன்று நீங்கள் எதிலும் அவசரப்படாமல் பொறுமையாக சிந்தித்து செயல்படுவதே சிறந்தது. வெளியூர் மற்றும் வெளி நாட்டு தொடர்பில் இருந்து உங்களுக்கு நல்ல விஷயங்கள் நடக்கும். வெளிநாடு செல்வதற்காக திட்டம் விட்டவர்களுக்கு கூட நல்ல செய்தி வந்து சேரும்.
தொழில் மற்றும் வியாபாரங்கள் விரிவுபடுத்தும் எண்ணங்கள் இன்று உங்களுக்கு மேலோங்கும். இன்று நீங்கள் வாங்கிய வங்கிக் கடனை நீங்கள் ஓரளவு அடைக்கக் கூடும். இன்றைய நாள் உங்களுக்கு ஒட்டுமொத்தத்தில் நல்ல நாளாகவே இருக்கும்.
இன்று உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உணவு விஷயங்களில் கட்டுப்பாடு அவசியமாகும். காதலில் உள்ளவர்களுக்கு காதல் கைகூடும். காதலில் உள்ள அனைத்து பிரச்சினைகளும் சரியாகிவிடும். கணவன் மனைவி இருவருக்கும் இடையே அன்பு அதிகரிக்கும். மாணவ மாணவியர்களுக்கு கல்வியில் எதிர்பாராத நன்மைகள் கூடும். கடுமையான உழைப்புக்கு நன்மை கூடும். நண்பர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். இன்று நீங்கள் முக்கியமான பணிகள் மேற்கொள்ளும் பொழுது கரும் நீல நிறத்தில் ஆடைகள் அணிவது சிறந்தது. கருநீலம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். இன்று நிகழ் சிவபெருமான் வழிபாடு மேற்கொள்வது உங்களுக்கு நன்மையை பெற்றுக் கொடுக்கும்.
இன்று உங்கள் அதிர்ஷ்டமான திசை தெற்கு. அதிர்ஷ்டமான எண் 6 மற்றும் 9. அதிர்ஷ்டமான நிறம் கரு நீலம் மற்றும் மஞ்சள் நிறம்.