ரிஷபம் ராசி அன்பர்களே..!இன்று உங்களின் ராசிக்கு உற்றார் உறவினர்களும், நண்பர்களும் ஆதரவாகச் செயல்படுவார்கள்.
உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றினாலும் மருத்துவ செலவுகள் ஏற்படாது. பணம் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் நல்ல லாபம் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு கூட்டாளிகளும், தொழிலாளர்களும் ஆதரவாக நடந்து கொள்வார்கள். புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவதால் முன்னேற்றம் ஒரளவுக்கு சிறப்பாக இருக்கும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். உயர் அதிகாரிகளின் ஆதரவு மகிழ்ச்சி அளிப்பதாக இருக்கும். நீங்கள் விஷ்ணு பகவான் வழிபாடு செய்வது மிகவும் நல்லது.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு. அதிர்ஷ்டமான எண்: 1. அதிர்ஷ்டமான நிறம்: மஞ்சள் நிறம்.