Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மீனம் ராசிக்கு…!அறிவாற்றல் அதிகரிக்கும்…!கோபம் உண்டாகும்…!!

மீனம் ராசி அன்பர்களே…!
இன்றைய நாள் உங்களுக்கு மனம் களைப்பு கொஞ்சம் இருந்துகொண்டேதான் இருக்கும்.

இன்று நீங்கள் எதைப்பற்றியோ
யாரைப்பற்றியும் யோசித்துக் கொண்டே தான் இருப்பீர்கள். பழைய நிகழ்வுகளால் அவர்கள் ஏதோ ஒரு விஷயத்தை நினைத்துக் கொண்டே இருப்பார்கள். இந்தப் பிரச்சினையிலிருந்து நீங்கள் விடைபெற தியானம் என்பது மிகவும் சிறப்பான ஒன்றாகும். இன்று நீங்கள் யோகா மற்றும் தியானப் பயிற்சி மேற்கொள்வதன் மூலம் மனம் தெளிவுபெறும் மற்றும் அறிவாற்றல் அதிகரிக்கும். திடீர் பயணங்களால் உங்களுக்கு திசை திருப்பம் ஏற்படும். பயணத்தின் பொழுது புதிய நபர்களின் சந்திப்பு கிட்டும். வங்கியில் உள்ள வைப்புநிதி கொஞ்சம் கரையை கூடும்.
வி. ஐ .பி களின் வருகையால் சில பிரச்சினைகள் உருவாகும். அவர்களிடம் நீங்க நிதானமாகவே பேசுங்கள். குடும்பச்சுமை உங்களுக்கு அதிகரித்துக் கொண்டேதான் செல்லும்.

கடன் பிரச்சனையிலிருந்து நீங்கள் விடுபட வேண்டும் என்று சிந்தித்துக் கொண்டே இருப்பீர்கள். எல்லா பிரச்சினைகளும் ஒரு சில காலங்களில் சரியாகிவிடும். எதிர்பார்த்த பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு இப்பொழுது தட்டிச் போகும். இன்று நீங்கள் மிகவும் பொறுமையுடன் இருக்க வேண்டும். முன்கோபத்தை தவிர்ப்பது சிறந்தது. சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் உங்களுக்கு பணிச்சுமை கொஞ்சம் குறையும். சகோதர சகோதரிகளிடம் கவனத்துடன் பேசுவது சிறந்தது.
அவர்கள் உங்களை புரிந்து கொள்வதில் சில சிரமங்கள் ஏற்படும். சிலருக்கு வெளியூர் வெளிநாட்டுப் பயணம் செய்வதற்கான வாய்ப்புகள் கிட்டும். வெளிநாட்டு தொடர்புடைய விஷயங்களில் ஓரளவு மட்டுமே முன்னேற்றம் இருக்கும். மற்றவர்களின் விவகாரத்தில் தலையிடாமல் இருப்பது சிறந்தது. கணவன் மனைவிக்கு இடையே சில பிரச்சினைகள் ஏற்படும். இருவரும் ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து செல்வது மிகவும் சிறந்தது.
காதலில் உள்ளவர்களுக்கு இன்றைய நாள் காதல் கொஞ்சம் கசக்கும் நாளாகத்தான் இருக்கும். மாணவ மாணவியர்களுக்கு இன்று கல்வியில் ஆர்வம் அதிகரித்து காணப்படும்.
இன்று உங்களுக்கு ஞாபகத்திறன் கொஞ்சம் கம்மியாகத்தான் இருக்கும். ஆதலால் நீங்கள் படித்த பாடத்தை படித்தபின் எழுதிப் பார்ப்பது மிகவும் சிறந்தது. நண்பர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். இன்று நீங்கள் முக்கியமான பணிகளை மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடைகள் அணிவது சிறந்தது.
சிவப்பு உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும்.
இன்று நீங்கள் முருகப் பெருமான் வழிபாடு மேற்கொள்வது உங்களுக்கு நல்ல பலனை பெற்றுக் கொடுக்கும்.

இது உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை கிழக்கு. அதிர்ஷ்டமான எண் 6 மற்றும் 9. அதிர்ஷ்டமான நிறம் சிவப்பு மற்றும் இளம் நீலம் நிறம்.

Categories

Tech |