மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று உங்களின் ராசிக்கு தன்னலம் கருதாமல் பிறருக்கு உதவி செய்வதில் ஈடுபாடுகள் அதிகரிக்கும்.
உடன் இருப்பவர்களால் அனுகூலம் இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சோர்வு மந்த நிலை போன்றவை ஏற்பட்டு அன்றாட பணிகளில் சுறு சுறுப்பாக ஈடுபட முடியாத நிலை இருக்கும். ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. பணவரவுகள் தேவைக்கேற்றபடியிருக்கும் என்றாலும் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொண்டால் தேவையற்ற கடன்கள் ஏற்படுவதைத் தவிர்க்கமுடியும். குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் வாக்கு வாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமைக் குறையாது. திருமண வயதை அடைந்தவர்களுக்கு சுப காரியங்கள் கை கூடி வரும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு. அதிர்ஷ்டமான எண்: 4. அதிர்ஷ்டமான நிறம்: பச்சை நிறம்.