கடகம் ராசி அன்பர்களே..! இன்று உங்களின் ராசிக்கு கணவன் மனைவிக்கு இடையே நெருக்கம் அதிகரிக்கும்.
அசையும் அசையா சொத்துக்களால் வீண் விரயங்களை சந்திக்க நேரிடும். புதிய பொருட்கள் வாங்கும் விஷயங்களில் கவனமாக இருக்கவேண்டும். கொடுக்கல் வாங்கலில் நிதானம் தேவை. பெரிய தொகைகளை பிறருக்கு கடனாகக் கொடுக்கும் பொழுது சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு அடிக்கடி மேற்கொள்ளும் பயணங்களால் தேவையற்ற அலைச்சல் டென்ஷன் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. உடன் பணிபுரிபவர்கள் சாதகமான பலனை உண்டாக்கும். பிள்ளைகள் தேவையற்ற நண்பர்களின் சகவாசத்தை தவிர்ப்பது மிகவும் நல்லது.
அதிர்ஷ்டமான திசை: கிழக்கு. அதிர்ஷ்டமான எண்: 2. அதிர்ஷ்டமான நிறம்: ப்ரவுன் நிறம்.