Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு…! வரவுகள் சிறப்பாக இருக்கும்..! முயற்சி திருவினையாக்கும்..!!

துலாம் ராசி அன்பர்களே…!
இன்று காரியங்களில் அனுகூலம் உண்டாகும்.

அதிகாரிகளிடம் எதிர்பார்த்த காரியங்கள் சாதகமாக அமையும். இன்று நீங்கள் விருந்து மற்றும் விசேஷங்களில் கலந்து கொள்ள வாய்ப்புகள் உள்ளது. இன்று விலை உயர்ந்த பொருட்களை வாங்கக் கூடிய அதிர்ஷ்டமும் உங்களிடம் உள்ளது. வரவேண்டிய பழைய பாக்கிகள் உங்களை தேடி வரும். அரசு ஊழியர்கள் நினைத்தபடி மாறுதல் அடையக்கூடும். நீங்கள் மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். சகோதர சகோதரிகளிடம் இருந்த சொத்துப் பிரச்சனைகள் இன்று விடை கிடைக்கும் நாளாக உள்ளது.
இன்று உங்கள் நிதி நிலையைப் பற்றி பார்க்கும் பொழுது நிதிநிலைமை சிறப்பாகவே உள்ளது. இன்று சேமிப்பு கிட்டும் நாளாக உள்ளது.
தடை தாமதங்கள் இருந்த காரியங்கள் கூட சிறப்பாக நடந்து முடியும். பிள்ளைகளால் உங்களுக்கு பெருமை கிடைக்கும். காரியங்களிலும் அனுகூலம் கிட்டும். பிள்ளைகள் நீங்கள் சொல்வதை கேட்டு நடப்பது உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும். இன்று நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ அதை செய்து முடித்து பாராட்டையும் பெறுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு நல்ல பெயர் கிட்டும்.இன்று நீங்கள் யோகா மற்றும் தியானப் பயிற்சி மேற்கொள்வதன் மூலம் மனம்
தெளிவுபெறும் மற்றும் அறிவாற்றல் அதிகரிக்கும். கணவன் மனைவி இருவருக்கும் இடையே சில பல பிரச்சனைகள் வந்து சேரும் ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து சென்றால் மிகவும் சிறந்தது. காதலில் உள்ளவர்களுக்கு காதல் கைகூடும். மாணவர்களுக்கு செய்கின்ற செயலை ஒருமுறைக்கு இருமுறை செய்ய வேண்டிய சூழல் இன்று அமையும். ஞாபகத்திறன் இன்று உங்களுக்கு கொஞ்சம் கம்மியாக உள்ளது. நீங்கள் பாடங்களை முயற்சி செய்து படித்துப் பாருங்கள். இன்று நீங்கள் முக்கியமான பணிகளை மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்ச் நிறத்தில் ஆடைகளை அணிவது சிறந்தது. ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். இன்று நீங்கள் சித்தர் மற்றும் குரு பகவான் வழிபாடு மேற்கொள்வது உங்களுக்கு நல்ல பலனை பெற்றுக் கொடுக்கும்.

அதிர்ஷ்டமான திசை தெற்கு. அதிர்ஷ்டமான எண் 6 மற்றும் 9. அதிர்ஷ்டமான நிறம் வெள்ளை மற்றும் ஆரஞ்சு நிறம்.

Categories

Tech |