Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு…! ஒத்துழைப்பு இருக்கும்..! லாபம் பெருகும்..!!

தனுசு ராசி அன்பர்களே…!
இன்றைய நாள் உங்களுக்கு மகிழ்ச்சிகரமான நாளாகவே உள்ளது.

சந்திராஷ்டமம் தினத்திலிருந்து நீங்கள் விடுபட்டு விட்டீர்கள். அதனால் நீங்கள் செய்யக்கூடிய காரியங்கள் அனைத்திலும் முன்னேற்றம் உள்ளது. திடீர் செலவுகள் ஏற்பட்டாலும் உங்களுக்கு தேவையான பணம் இருப்பதால் கவலை இல்லை. அலுவலகத்தில் உங்களைப் பற்றிய நல்ல எண்ணங்கள் உருவாகும். அலுவலகத்தில் உங்களுக்கு பணி சுமை கூடினாலும் பின்னர் சக ஊழியர்கள் உங்களுக்கு ஒத்துழைப்பாக இருப்பார்கள். வியாபாரத்தில் விற்பனை மற்றும் லாபம் கூடுதலாக உள்ளது. கணவன் மனைவி இருவருக்கும் இடையே நெருக்கம் அதிகரிக்கும். அலைபேசி வழியாக வரக்கூடிய தகவல் உங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும். இன்று நீங்கள் புதிய முயற்சிகள் மேற்கொள்ளும் போது சிறிய தாமதங்கள் வந்த தான் செய்யும்.
எதிலும் நிதானமாக செயல்பட்டால் வெற்றி நிச்சயம். காதலில் உள்ளவர்களுக்கு காதல் கைகூடும். காதலில் உள்ள அனைத்து சிரமங்களும் தீர்ந்துவிடும். மாணவ மாணவியர்களுக்கு எதிர்பாராத அளவில் தனவரவு உள்ளது. மாணவர்களுக்கு ஏதேனும் ஒரு வகையில் பணவரவு கிட்டும். அதேபோல் நீங்கள் கல்விக்காக சிறிது பணம் செலவு செய்ய நேரிடும். படித்த பாடத்தை படித்து பின் எழுதிப் பார்ப்பது மிகவும் சிறந்தது. ஆசிரியர் சொல்வதை கூர்ந்து கவனித்து வெற்றி அடையுங்கள். இன்று நீங்கள் முக்கியமான பணிகளை மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடைகளை அணிவது சிறந்தது. நீல நிறம் உங்களுக்கு அதிசயத்தைப் பெற்றுக் கொடுக்கும். இன்று நீங்கள் சித்தர் மற்றும் குரு பகவான் வழிபாடு மேற்கொள்வது உங்களுக்கு நல்ல பயனை பெற்றுக் கொடுக்கும்.

அதிர்ஷ்டமானதிசை கிழக்கு. அதிர்ஷ்டமான எண் 1 மற்றும் 4. அதிர்ஷ்டமான நிறம் நீலம் மற்றும் சிவப்பு நிறம்.

Categories

Tech |