Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மீனம் ராசிக்கு…! வேலை வாய்ப்பு அதிகரிக்கும்..! எச்சரிக்கை தேவை..!!

மீனம் ராசி அன்பர்களே…!
இன்றைய நாள் எதிர்பாராத பொருள் வரவு உண்டாகும்.

வழக்கமான பணிகளில் மட்டும் நீங்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
பழைய சொத்து வகையில் நீங்கள் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களில் உள்ள பிரச்சனைகள் அனைத்தும் சரியாகிவிடும். நீங்கள் போட்ட அனைத்து திட்டமும் நிறைவேறிவிடும். உங்களுக்கு புண்ணிய காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும்.
பிரிந்து சென்ற சகோதரர்கள் மீண்டும் வந்து இணைய கூடுவார்கள். கணவன் மனைவி இருவருக்குமே இந்த பிரச்சனைகள் கூட சரியாகிவிடும். மனைவி குடும்பத்தார் வலியிலிருந்து உங்களுக்கு அனுகூலம் கிட்டும்.
பெண்களால் இன்று முன்னேற்றமான தருணங்கள் அமையக்கூடும். உங்களை விட்டு பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்து இணைவதால் உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும். இல்லத்தில் சுபகாரியப் பேச்சுக்கள் நல்ல முடிவை கொடுப்பதாக இருக்கும். அரசியல் பிரமுகர்கள் திட்டமிட்டபடி புதிய பதவிகளைப் பெறுவார்கள். இன்று உங்களுக்கு நல்ல வாய்ப்புகள் வந்து சேரும். பெற்றோர்கள் வகையில் இருந்த பகை நீங்கும்.வழக்குகள் அனைத்தும் உங்களுக்கு சாதகமான பலனைக் கொடுக்கும். காதலில் உள்ளவர்களுக்கு காதல் கைகூடும். வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிட்டும். இன்று நீங்கள் வெளியே இடத்திற்கு செல்லும் பொழுது பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். பயணத்தின் பொழுது எச்சரிக்கை அவசியமாகும். வெளி நபர்களிடம் பேசுவதை குறைத்துக் கொள்வது சிறந்தது. நீங்கள் எடுத்துச் செல்லக்கூடிய பணத்தை கவனமாக எடுத்து செல்லுங்கள். அதிகப்படியான பணத்தை நீங்கள் பயணத்தின் போது எடுத்துச் செல்ல வேண்டாம். மாணவர்கள் நீங்கள் எதிலும் திட்டமிட்டு செயல்பட்டால் வெற்றி நிச்சயம். நண்பர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். ஆசிரியர் சொல்வதை கூர்ந்து கவனிப்பது சிறந்தது. சக மாணவர்களிடம் எச்சரிக்கையுடன் இருப்பது சிறந்தது. இன்று நீங்கள் முக்கியமான பணிகளை மேற்கொள்ளும் பொழுது பழுப்பு நிறத்தில் ஆடைகள் அணிவது சிறந்தது. பழுப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையும் பெற்றுக் கொடுக்கும். இன்று நீங்கள் சித்தர் மற்றும் குரு பகவான் வழிபாடு மேற்கொள்வது நல்ல பலனை பெற்று கொடுக்கும்.

அதிர்ஷ்டமான திசை தெற்கு. அதிர்ஷ்டமான எண் 3 மற்றும் 9. அதிர்ஷ்டமான நிறம் பழுப்பு மற்றும் நீலம் நிறம்.

Categories

Tech |