கன்னி ராசி அன்பர்களே..! இன்று உங்களின் ராசிக்கு நல்ல நாளாக இருக்கும்.
பணம் கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாமல் இருப்பது நல்லது. உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு கௌரவமான பதவி உயர்வுகள், எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். வெளியூர் சென்று பணிபுரிய விரும்புபவர்களின் விருப்பமும் நிறைவேறும். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு சிறப்பான லாபம் கிடைக்கும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியை கொடுக்கும். மாணவர்கள் கல்வியில் ஈடுபாடுடன் செயல்பட்டால் நன்மை பெற முடியும். நீங்கள் அம்மன் வழிபாடு செய்தால் நன்மை உண்டாகும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு. அதிர்ஷ்டமான எண்: 7. அதிர்ஷ்டமான நிறம்: ரோஸ் நிறம்.