துலாம் ராசி அன்பர்களே…!
இன்று நீங்கள் இஷ்ட தெய்வத்தை வழிபட கூய நாளாக உள்ளது.
இன்று நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வெற்றி கிடைக்கும்.
சமூக அக்கரை இன்று உங்களுக்கு அதிக அளவு காணப்படும். புதிய ஒப்பந்தங்கள் உங்கள் கையில் வந்து சேரும். புதிய பணி வளர்ச்சியும் வரக்கூடும். வேலைக்காக காத்திருந்த இளைஞர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். முடிந்தவரை நீங்கள் நிதானமாக இருக்க வேண்டும் முன்கோபத்தை தவிர்ப்பது சிறந்தது.
குடும்ப விஷயத்தை பிறரிடம் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது சிறந்தது. உங்களின் ரகசியத்தை நீங்கள் பிறரிடம் சொல்லாமல் இருப்பது சிறந்தது. அதைப்போல் விலை உயர்ந்த பொருட்களை கையாளும் பொழுது கவனம் தேவை. கண்ணாடி சார்ந்த பொருளாக இருந்தாலும் சரி சங்கம் சார்ந்த பொருளாக இருந்தாலும் சரி கொஞ்சம் கவனம் தேவை. பெண்கள் கவர் சமையல் செய்யும் பொழுது கவனமுடன் இருக்க வேண்டும். பிள்ளைகளால் சில பிரச்சினைகளும் உண்டாகும். வேலை செய்யக்கூடிய பெண்களுக்கு வேலையில் நல்ல முன்னேற்றம் உள்ளது. நண்பர்கள் உங்களுக்கு ஆதரவு கொடுப்பார்கள். கணவன் மனைவி இருவரும் எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் அவசரப்படாமல் நிதானத்துடன் இருக்க வேண்டும். ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து செல்வது சிறந்தது. இன்று காதலில் உள்ளவர்கள் கூட ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்துதான் ஆகவேண்டும். பின்னர் காதல் கைகூடும். மாணவ மாணவியர்களுக்கு இன்று கல்வியில் ஆர்வம் அதிகரித்து காணப்படும்.
நண்பர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். இன்று நீங்கள் முக்கியமான பணிகளை மேற்கொள்ளும் பொழுது பழுப்பு நிறத்தில் ஆடைகள் அணிவது சிறந்தது. பழுப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். இன்று நீங்கள் அம்மன் வழிபாடு மேற்கொள்வது உங்களுக்கு நல்ல பலனை பெற்றுக் கொடுக்கும்.
அதிர்ஷ்டமான திசை கிழக்கு. அதிர்ஷ்டமான எண் 2 மற்றும் 5. அதிர்ஷ்டமான நிறம் கறுப்பு மற்றும் மஞ்சள் நிறம்.