மகரம் ராசி அன்பர்களே…!
இன்று செயல்களில் நேர்த்தி பிரதிபலிக்கும் நாளாக உள்ளது.
குடும்ப உறுப்பினர்கள் உங்களின் செயலைக் கண்டு பாராட்டுவார்கள்.
என்ன ஒரு பிரச்சினை என்றால் இன்று முதல் உங்களுக்கு சந்திராஷ்டமம் தினம் வருவதால் எதிலும் கவனம் தேவை. இன்று நீங்கள் பண பொறுப்புகளை ஏற்றுக் கொள்ளக் கூடாது பின்பு தன் தொழிலை விரிவு படுத்துவதில் தள்ளி வைப்பது சிறந்தது. தொழில் மற்றும் வியாபாரம் வளர்ச்சிக்காக நீங்கள் கடுமையாக உழைப்பீர்கள். நல்ல விஷயங்களை கற்றுக் கொள்வதற்கு நீங்கள் உங்களை தயார்படுத்திக்
கொள்வீர்கள். இன்று உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. இன்று நீங்கள் ஆடம்பர பொருட்கள் மீது அதிகளவு நாட்டம் கூடும் நீங்கள் சிக்கனத்தைக் கடைபிடித்து தேவையான பொருட்களை வாங்குவது சிறந்தது. இன்று நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு விரும்பிய பொருளை வாங்கி கொடுப்பீர்கள். இன்று நீங்கள் பொழுதுபோக்கு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பொழுது கவனம் தேவை. ஆன்மிக பணியில் உங்களுக்கு அதிக அளவு நாட்டம் செல்லும். இன்று குடும்பத்திலும் வாழ்க்கையிலும் சில பிரச்சினைகள் சந்திக்க நேரிடும். இன்று உங்களால் முடிந்தால் நீங்கள் ஆலயம் சென்று வழிபடுவது சிறந்தது.
இறைவனின் துணையோடு நீங்கள் எதையும் செய்தால் வெற்றி நிச்சயம். தயவு செய்து நீங்கள் யாருக்கும் எவ்விதமான வாக்குறுதிகளும் கொடுக்க வேண்டாம். வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. யாருக்கும் எவ்விதமான ஜாமீன் கையொப்பமும் போடக்கூடாது. இன்று நீங்கள் எண்ணெய் மற்றும் காரம் சார்ந்த பொருட்களை தவிர்ப்பது சிறந்தது. இன்று நீங்கள் உங்கள் முன்கோபத்தை தவிர்ப்பது சிறந்தது. கணவன் மனைவி இருவருக்கும் இடையே சில பிரச்சினைகள் வரக்கூடும் பொறுமையுடன் கையாளுவது சிறந்தது. ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுப்பது மிகவும் சிறந்தது. காதலில் உள்ளவர்களுக்கு காதல் கைகூடும். மாணவ மாணவியர்களுக்கு இன்று கல்வியில் ஆர்வம் அதிகரித்து காணப்படும். நண்பர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். இன்று நீங்கள் முக்கியமான பணிகளை மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடைகள் அணிவது சிறந்தது. சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையும் அளிக்கும். இன்று நீங்கள் அம்மன் வழிபாடு மேற்கொள்வது உங்களுக்கு நல்ல பலனைப் பெற்றுக் கொடுக்கும்.
அதிர்ஷ்டமான திசை தெற்கு. அதிர்ஷ்டமான எண் 7 மற்றும் 9. அதிர்ஷ்டமான நிறம் சிவப்பு மற்றும் மஞ்சள் நிறம்.