Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கும்பம் ராசிக்கு…! ஒற்றுமை வலுப்படும்..! மகிழ்ச்சி உண்டாகும்..!!

கும்பம் ராசி அன்பர்களே…!
இன்று நீங்கள் எதிர்காலத் தேவைக்காக இப்பொழுதே தயாராகிக் கொண்டு இருப்பீர்கள்.

உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில் உங்கள் செல்வாக்கு கூடும். சமுதாயத்தில் உங்களுக்கு அதிக அளவு அக்கரை கூடும். இன்று உங்களால் முடிந்த உதவியை செய்து கொடுப்பீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் நீங்கள் அதிரடியாக சில திட்டம் தீட்டுவீர்கள்.
இன்று உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறைவில்லை. என்று நீங்கள் சொல்கின்ற வார்த்தையை மற்றவர்களும் கேட்டு நடப்பது உங்கள் மனதில் மகிழ்ச்சி அளிக்கும். சகோதர சகோதரிகளின் ஒற்றுமை இன்று உறுதி ஆகும்.
பூர்வீக சொத்துக்களில் இருந்த வில்லங்கங்கள் கூட சரியாகிவிடும். உங்களின் உழைப்புக்கு எந்த நல்ல பாராட்டு கிடைக்கும். இன்று நீங்கள் பெரியோர்களை மதித்து நடப்பது சிறந்தது. இன்று உங்களுக்கு பயணங்கள் செல்ல நேரிடும். இன்று உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. இன்று நீங்கள் திட்டமிட்டு செயல்பட்டு வெற்றி அடைவீர்கள். தேவையற்ற மன சஞ்சலங்களும் வீண் செலவுகளும் ஏற்படக்கூடும். இன்று உங்களுக்கு ஆராய்ச்சி தொடர்புடைய விஷயங்களில் அதிக அளவு நாட்டம் செல்லும். இன்று நீங்கள் தொலைநோக்கு பார்வையுடன் தான் எதையும் செய்து முடிப்பீர்கள். இன்று குடும்பத்தைப் பொறுத்தவரை கணவன் மனைவி இருவருக்கும் இடையே அன்பு கிட்டும். நெருக்கம் கூடி விடும்.
குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு மழலைச் செல்வம் கிட்டும். காதலில் உள்ளவர்களுக்கு காதல் கைகூடும். மாணவ மாணவியர்களுக்கு என்று கல்வியில் ஆர்வம் அதிகரித்து காணப்படும். நண்பர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். இன்று நீங்கள் முக்கியமான பணிகளை மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடைகள் அணிவது சிறந்தது. சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். இன்று நீங்கள் அம்மன் வழிபாடு மேற்கொள்வது உங்களுக்கு நல்ல பலனை பெற்றுக் கொடுக்கும்.

அதிர்ஷ்டமான திசை தெற்கு. அதிர்ஷ்டமான எண் 7 மற்றும் 8. அதிர்ஷ்டமான நிறம் சிவப்பு மற்றும் மஞ்சள் நிறம்.

Categories

Tech |