விருச்சிகம் ராசி அன்பர்களே..! இன்று உங்களின் ராசிக்கு துணிச்சலுடன் செயல்படக்கூடிய நாளாக இருக்கும்.
சிலருக்கு உத்தியோகத்தில் கௌரவமான பதவி உயர்வுகள் கிடைப்பதற்கான சந்தர்ப்பங்கள் அமையும். முடிந்த வரை தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது மூலம் அலைச்சலைக் குறைத்துக் கொள்ளலாம். பணம் கொடுக்கல் வாங்கல் சரளமாக நடைபெறுவதால் எதிர்பார்த்த லாபத்தை பெற முடியும். தொழில் மற்றும் வியாபாரம் நல்ல முறையில் நடைபெற்று லாபத்தை அள்ளிக்கொடுக்கும். போட்டி பொறாமைகளை சமாளித்து ஏற்றம் பெற கூடிய அளவிற்கு ஆற்றல் உண்டாகும். நீங்கள் முருகன் வழிபாடு செய்வது மிகவும் நல்லது.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு. அதிர்ஷ்டமான எண்: 1. அதிர்ஷ்டமான நிறம்: ஊதா நிறம்.