தனுசு ராசி அன்பர்களே..! இன்று உங்களின் ராசிக்கு விடா முயற்சியால் பல சாதனைகளைப் படைக்க இருக்கின்றீர்கள்.
எதிலும் ஏற்றம் மிகுந்த பலன்களை அடைவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியும் கணவன் மனைவியிடையே ஒற்றுமை அதிகரிக்கும். பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருப்பதால் குடும்பத் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்து விட முடியும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை எடுத்துக் கொள்வதும் உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருப்பது மிகவும் நல்லது. திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளை தற்போது மேற்கொண்டால் அனுகூலப் பலன்களை அடைவீர்கள். பயணங்களால் சிறுசிறு அலைச்சல் மற்றும் டென்ஷன் சந்திக்க நேரிடும்.
அதிர்ஷ்டமான திசை: தென் மேற்கு. அதிர்ஷ்டமான எண்: 7. அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை நிறம்.