கும்பம் ராசி அன்பர்களே..! இன்று உங்களின் இராசிக்கு தேவையற்ற அலைச்சல் அடிக்கடி இடையூறுகள் உண்டாகும் என்பதால் கவனமாக இருக்க வேண்டும்.
பணவரவுகள் தாராளமாக இருப்பதால் குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்து விட முடியும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை ஓரளவு சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவதன் மூலம் தேவையற்ற மருத்துவ செலவுகளை தவிர்க்கலாம். உற்றார் உறவினர்கள் சாதகமாக செயல்படுவார்கள். அசையும் அசையா சொத்துக்களால் சிறு சிறு விரயங்கள் ஏற்படலாம். கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாமல் இருப்பதன் மூலம் வீண் பிரச்சனைகள் ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு. அதிர்ஷ்டமான எண் :4 அதிர்ஷ்டமான நிறம்: நீலம் நிறம்.