துலாம் ராசி அன்பர்களே…! இன்று சுறுசுறுப்பாக செயல்பட்டு எதையும் திறமையுடன் செய்து முடிக்கும் ஆற்றல் கொண்ட உங்களின் ராசிக்கு உங்களின் பலமும் வலிமையும் அதிகரிக்கக் கூடிய நாளாக இன்றைய நாள் இருக்கும். எந்த வித பிரச்சனைகளையும் சமாளிக்க கூடிய ஆற்றல் உண்டாகும். உடல் ஆரோக்கியத்திலும் சிறு சிறு பாதிப்புகள் தோன்றினாலும் மருத்துவ செலவுகள் எதுவும் ஏற்படாது.
பேச்சில் சற்று நிதானத்தை கடைப் பிடித்தால் குடும்பத்தில் நிம்மதி நிலைநாட்ட முடியும். பணம் பல வழிகளில் தேடி வந்து பாக்கெட்டை நிரப்பும். சிலருக்கு வீடு, மனை வாங்கும் எண்ணங்கள் ஈடேறும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டி பொறாமைகள் குறைந்து புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை: மேற்கு
அதிர்ஷ்டமான எண்: 7
அதிர்ஷ்டமான நிறம்: நீல நிறம்