Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு…! அதிர்ஷ்டம் கிட்டும்…! அனுகூலம் பெருகும்…!!

தனுசு ராசி அன்பர்களே…!
இன்று முயற்சிகள் தாமதமாக இருப்பதால் நீங்கள் சிறிது கவலைப்படுவீர்கள்.

நாம் செய்ய நினைத்த காரியங்களை செய்ய முடியவில்லையே என்று மனவருத்தம் காணப்படும். உங்களுடைய தாயின் உடல்நிலையில் கவனம் தேவை. தாய்க்கு வேண்டியதை செய்து கொடுங்கள். தந்தையிடம் வீண் வாக்குவாதங்கள் வேண்டாம். இன்று உங்களுக்கு எந்த ஒரு காரியத்திலும் சிறியதாக தடைகள் இருக்கத்தான் செய்யும். நீங்கள் தடைகளை உடைத்து இருந்து தான் வெற்றி அடைய முடியும். எப்பொழுதும் வெற்றி உங்கள் பக்கமே இருக்கிறது என்று நீங்கள் மனம் திடமாக இருக்க வேண்டும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்த தடைகள் அனைத்தும் சரியாகிவிடும். கடின முயற்சிக்கு பின்பே எல்லாம் சுமுகமாக செல்லும். போட்டி மற்றும் பொறாமைகள் கொஞ்சம் இருக்கத்தான் செய்யும்.

அதனையும் நீங்கள் சரி செய்து தான் ஆகவேண்டும். நீங்கள் கொடுத்த இடத்தில் பணத்தை திரும்பி வாங்குவதற்கு கொஞ்சம் சிக்கல்கள் உள்ளது. நீங்கள் நாசுக்காக பேசி தான் வாங்க வேண்டும், வேகம் காட்ட வேண்டாம்.இன்று உங்களுக்கு உத்தியோகத்தை அதிக பணிச்சுமை காணப்படும். புதிதாக பதவிகள் மற்றும் பொறுப்புகள் உங்களைத் தேடி வரக்கூடும். எதிலும் நிதானமும் எச்சரிக்கையும் கண்டிப்பாக தேவை. அதிகப்படியான பணச் செலவை நீங்கள் குறைத்துக் கொள்வது சிறந்தது. சில சகவாசத்தால் உங்களுக்கு கெட்ட பெயர்தான் கூட வர வாய்ப்பு உள்ளது.

அந்த சகவாசத்தை நீங்கள் முன்கூட்டியே சரிசெய்து கொள்வது சிறந்தது. கணவன் மனைவிக்கு இடையே எந்தவிதமான பெரிய பிரச்சினைகளும் இல்லை. ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து செல்வது சிறந்தது. காதலில் உள்ளவர்களுக்கு காதல் கைக்கூடும். சில பல பிரச்சினைகள் பின்பு காதல் கைகூடும். இன்று மாணவர்களுக்கு விளையாட்டு மற்றும் கேளிக்கையில் ஆர்வம் அதிகரித்து காணப்படும்.
நீங்கள் சிறிது நேரம் ஒதுக்கி பாடங்கள் கற்பது சிறந்தது. படித்த பாடத்தை படித்த பின் எதிர்பார்ப்பது மிகவும் சிறந்தது. இன்று நீங்கள் முக்கியமான பணிகளை மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடைகளை அணிவது சிறந்தது. ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். இன்று நீங்கள் விஷ்ணு பகவான் வழிபாடு மேற்கொள்வது உங்களுக்கு நல்ல பலனை பெற்றுக் கொடுக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை தெற்கு. அதிர்ஷ்டமான எண் 2 மற்றும் 5.
அதிர்ஷ்டமான நிறம் வெள்ளை மற்றும் ஆரஞ்சு நிறம்.

Categories

Tech |