Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

நாளைய (18-09-2020) நாள் எப்படி இருக்கும்..? இதோ உங்கள் ராசிக்கு..!!

நாளைய  பஞ்சாங்கம்

18-09-2020, புரட்டாசி 02, வெள்ளிக்கிழமை, பிரதமை திதி பகல் 12.51 வரை பின்பு வளர்பிறை துதியை.

உத்திரம் நட்சத்திரம் காலை 06.59 வரை பின்பு அஸ்தம் நட்சத்திரம் பின்இரவு 04.06 வரை பின்பு சித்திரை.

சித்தயோகம் காலை 06.59 வரை பின்பு அமிர்தயோகம் பின்இரவு 04.06 வரை பின்பு சித்த யோகம்.

நேத்திரம் – 0.

ஜீவன் – 0.

சந்திர தரிசனம்.

 

இராகு காலம் – பகல் 10.30-12.00,

 எம கண்டம்-  மதியம் 03.00-04.30,

 குளிகன் காலை 07.30 -09.00,

 சுப ஹோரைகள் – காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00,  மாலை 05.00-06.00,  இரவு 08.00-10.00

நாளைய ராசிப்பலன் –  18.09.2020

மேஷம்

உங்களின் ராசிக்கு உடன்பிறந்தவர்களால் நல்ல செய்தி வரும். புதியவர் ரீதியில் பொருளாதாரம் சிறப்பாக இதுக்கும். கடன் பிரச்சினைகள் விலகும். குழந்தைகள் பொறுப்பாக இருப்பார். வெளியூர் செல்வதனால் அனுகூலம் உண்டாகும். தொழிலில் எதிர்பார்த்த உயர்வு கிடைக்கும்.

ரிஷபம்

உங்களின் ராசிக்கு வீட்டில் எதிர்பாராத செலவு கூடும். மற்றவர்களால் தேவையற்ற பிரச்சினைகள் வரும். புதிய தொழிலை தொடங்க காலதாமதம் ஏற்படும். உடன்பிறந்தவர்களால் உதவி கிட்டும்.எந்த விஷயத்திலும் ஒரு முறைக்கு பல முறை சிந்தித்து செயல்படுங்கள் அதுவே நல்லது.

மிதுனம்

உங்களின் ராசிக்கு உடல்நிலை மந்தமாக இருக்கும். வாகனங்களால் வீண் செலவு ஏற்படும். தொழிலில் உடன் இருப்பவர்களிடம் கருத்து வேறுபாடு ஏற்படும். சிக்கனமாக இருந்தால் கடன் குறையும். உறவினர்கள் மூலமும் உதவி கிட்டும்.

கடகம்

உங்களின் ராசிக்கு எந்த செயல் செய்தாலும் வெற்றி கிடைக்கும். புதிய பொருட்கள் வாங்க ஆர்வம் கொள்வீர். உடன் பிறந்தவர்களிடம் ஒற்றுமை கூடும். சுப காரியங்கள் கை கூடும். உத்தியோகத்தில் ஊழியர்கள் சாதகமாக இருப்பார். தொழிலில் நீண்ட நாள் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்க வாய்ப்பு.

சிம்மம்

உங்களின் ராசிக்கு பணவரவு சுமாராக தான் இருக்கும். வீட்டில் குழந்தைகளின் ஒற்றுமை குறையும். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் இருந்த பிரச்சனை விலகி முன்னேற்றம் ஏற்படும். தொழிலில் திறமைக்கேற்ற வாய்ப்பு கிடைக்கும்.

கன்னி

உங்களின் ராசிக்கு உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி கூடும். திருமண சுப காரியங்களில் முன்னேற்றம் காண்பீர். முதியோர் ரீதியில் புதிய திட்டம் வெற்றி கொடுக்கும். பெரியவர்களின் நட்பு உண்டாகும். தொழிலில்  மாற்றங்கள் உண்டாகும்.

துலாம்

உங்களின் ராசிக்குதொழிலில் தேவையில்லாத பிரச்சினைகளை சந்திக்க நேரும். தொழிலில் எதிர்பார்த்த கடனுதவி கிடைக்க தாமதமடையும்.புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின்  ஒத்துழைப்பு உண்டாகும்.எதிலும் விட்டுக் கொடுத்துச் செல்லுங்கள் அதுவே நல்லது. தெய்வ வழிபாடு கூடும்.

விருச்சிகம்

உங்களின் ராசிக்கு வீட்டில் சுப செலவு உண்டாகும். உறவினர்களிடம் கருத்துவேறுபாடு அகலும். சுபகாரியங்களில் தடைகள் விலகும். தொழிலில் பெரிய மனிதர்களின் அறிமுகம் உண்டாகும். உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும். நவீன பொருட்களை வாங்க யோகம் உண்டாகும்.

தனுசு

உங்களின் ராசிக்கு குழந்தைகளால் வீட்டில் மகிழ்ச்சியான சூழல் உருவாகும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும் வாய்ப்பு உண்டு. தொழிலில் வேலைப்பளு குறையும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சுப நிகழ்ச்சிகள் கைகூடும். வியாபாரம்  பெருகும்.

மகரம்

உங்களின் ராசிக்கு வீட்டில் தேவையில்லாத டென்ஷன் மன குழப்பம் ஏற்படும். உடல் நிலையில் சிறு பாதிப்பு தோன்றும். சுபகாரியங்களில் தாமதமடையும். தொழிலில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பாக இருப்பார். வீண் செலவுகளைக் குறைத்தால் பணப் பிரச்சினை நீங்கும்.

கும்பம்

உங்களின் ராசிக்கு வீட்டில் தேவையற்ற மனஸ்தாபம் உண்டாகும். உங்கள் ராசியில் சந்திராஷ்டமம் இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் பாதிப்பு உண்டாகும். உணவு விஷயங்களில் கட்டுப்பாடு வேண்டும். வெளிப் பயணம் செல்லும்போது நிதானமாக இருங்கள்.

மீனம்

உங்களின் ராசிக்கு வீட்டில் சுப செலவு உண்டாகும்.உத்தியோகத்தில் இருந்த மந்தநிலை நீங்கும் முன்னேற்றம் காண்பீர். மறைமுக எதிர்ப்புகள் அனைத்தும் விலகும். தொழிலில் எதிர்பார்த்த சலுகை உண்டாகும். ஆடம்பரப் பொருட்களை வாங்குவீர்கள். வீட்டுத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும்.

Categories

Tech |