Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு…! தடைகள் நீங்கும்..! அன்பு வெளிப்படும்..!!

தனுசு ராசி அன்பர்களே…!
இன்று உங்களுக்கு முயற்சிகள் தாமதமாக இருப்பதால் மனவருத்தம் ஏற்படும்.

நாம் செய்ய நினைத்த காரியத்தை முடியவில்லையே என்ற மன அழுத்தம் ஏற்படும். உங்கள் தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. தந்தையிடம் அன்பு காட்டுங்கள், வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது சிறந்தது. இன்று உங்களுக்கு எந்த ஒரு காரியத்திலும் சிறிய தடைகள் ஏற்படத்தான் செய்யும். தடைகளை உடைத்தெறிந்த தான் எங்கள் வெற்றி அடைய முடியும். தன்னம்பிக்கை இழக்காமல் இருப்பது சிறந்தது. எப்பொழுதுமே வெற்றி உங்கள் பக்கம் இருக்கும் என்பதை நீங்கள் அன்புடன் வரவேற்க வேண்டும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்த தடைகள் கண்டிப்பாக சரியாகிவிடும். கடுமையான முயற்சிக்குப் பின் அனைத்துமே சிறப்பாக இருக்கும். போட்டிகள் பொறாமைகள் கொஞ்சம் இருக்கத்தான் செய்யும் அதனை நீங்கள் சரி செய்து தான் பின்னரே முன்னேற முடியும்.
இன்று நீங்கள் சக ஊழியர்களிடம் அன்பை வெளிப்படுத்த வேண்டும். இன்று உங்களுக்கு உத்தியோகத்தில் பணிச்சுமை அதிகரித்து காணப்படும். புதிதாக பதவிகள் மற்றும் பொறுப்புகள் உங்களைத் தேடி வரக்கூடும்.
எதிலும் நிதானமும் எச்சரிக்கையும் கண்டிப்பாக தேவை. அதிகப்படியான பணச் செலவை நீங்கள் குறைத்துக் கொள்வது சிறந்தது. நீங்கள் சேமிப்பதற்கான திட்டத்தை வழிவகுப்பது மிகவும் சிறந்தது. சில சகவாசத்தால் உங்களுக்கு கெட்ட பெயர்கள் கூட வர வாய்ப்பு உள்ளது. அதனை நீங்கள் முன்கூட்டியே சரி செய்து கொள்வது மிகவும் சிறந்தது. குடும்பத்தில் கணவன் மனைவி இருவருக்கும் இடையே பிரச்சினைகள் அவ்வப்போது வந்து சரியாகிவிடும். காதலில் உள்ளவர்கள் கொஞ்சம் நிதானமான போக்கை மேற்கொள்வது சிறந்தது.
நீங்கள் உங்கள் முன்கோபத்தை தவிர்ப்பது சிறந்தது. மாணவ மாணவியர்களுக்கு இன்று கல்வியில் ஆர்வம் அதிகரித்து காணப்படும்.
நண்பர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். இன்று நீங்கள் முக்கியமான பணிகளை மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடைகளை அணிவது சிறந்தது.ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை பெற்றுக் கொடுக்கும். இன்று நீங்கள் விஷ்ணு பகவான் வழிபாடு மேற்கொள்வது உங்களுக்கு நல்ல பலனை பெற்றுக் கொடுக்கும்.

அதிர்ஷ்டமான திசை தெற்கு. அதிர்ஷ்டமான எண் 2 மற்றும் 5. அதிர்ஷ்டமான நிறம் வெள்ளை மற்றும் ஆரஞ்சு நிறம்.

Categories

Tech |