மேஷம் ராசி அன்பர்களே..!
வாழ்வில் வளம்பெற புதிய சூழல் உண்டாகும்.
ஆர்வமுடன் எதிலும் ஈடுபடுவீர்கள். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி ஏற்படும். பணச்சேமிப்பு அதிகரிக்கும். பணியாளர்களுக்கு சலுகை கிடைக்கும். மறைமுக எதிர்ப்புகள் குறையும். பழைய பிரச்சனைகள் சரியாகிவிடும். நினைத்த காரியத்தில் ஏற்பட்ட தடை, தாமதங்கள் நீங்கும். குடும்பத்திலிருந்த பிரச்சினைகள் தீரும். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். பிள்ளைகளின் மூலம் பெருமை உண்டாகும். சாமர்த்தியமான பேச்சின்மூலம் காரியத்தை செய்து முடிப்பீர்கள். கடன் பிரச்சினைகள் அனைத்தும் கட்டுக்குள் இருக்கும். குடும்பத்தார்கள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள். பெரிய பிரச்சினைகள் இல்லாமல் இன்றையநாள் சிறப்பாக இருக்கும். மனதைரியமாக எந்தவொரு வேலையிலும் ஈடுபட்டு வரலாம். கணவன் மனைவிக்கிடையே பிரச்சனைகள் இல்லாமல் சுமுகமாக செல்லும். காதலில் உள்ளவர்களுக்கு சிரமங்கள் அனைத்தும் குறையும். காதல் கைகூடும். மாணவர்களுக்கு கல்வியில் நாட்டம் செல்லும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணியவேண்டும். சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே இன்று அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு எந்தவொரு வேலையும் தொடங்குங்கள், முன்னேற்றம் உண்டாகும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு.
அதிர்ஷ்டமான எண்: 2 மற்றும் 6.
அதிர்ஷ்டமான நிறம்: சிவப்பு மற்றும் மஞ்சள் நிறம்.